ரூ.10-க்கு மளிகைக்கடையில் ஒயின்..! மகாராஷ்டிரா அரசு
மளிகைக்கடைகளில் 10 ரூபாய்க்கு ஒயின் விற்பனையை அறிமுகப்படுத்த மகாராஷ்டிரா மாநில அரசு திட்டமிட்டுள்ளது
தமிழகத்தில் மதுப்பானக்கடைகளை அரசு நடத்தி வரும் நிலையில், அதனை கைவிட வேண்டும் என்ற கோரிக்கைகள் நீண்ட நாட்களாக வலியுறுத்தப்பட்டு வருகின்றன. ஆனால், மகாராஷ்டிரா மாநில அரசு, ஒயின் விற்பனையை மளிகைக் கடை முதல் சூப்பர் மார்க்கெட், பேக்கரி வரை என அனைத்து இடங்களிலும் கிடைக்கும் வகையில், புதிய திட்டம் ஒன்றை தயாரித்து, அடுத்த ஆண்டு நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த திட்டம் நடைமுறைக்கு வரும்போது, மகாராஷ்டிராவில் உள்ள அனைத்து கடைகளிலும் ஒரு லிட்டர் ஒயின் 10 ரூபாய்க்கு கிடைக்கும்.
ALSO READ | பாரம்பரிய விழாவை நடனத்துடன் கொண்டாடிய தோடர் இன மக்கள்..! வீடியோ
இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு காரணம், மற்ற மதுவகைகளைக் காட்டிலும் மிக மிக குறைவான போதைவஸ்துவை ஒயின் கொண்டிருப்பதால், அதனை அனைத்து இடங்களிலும் விற்பனை செய்வதில் எந்த பிரச்சனையும் இல்லை என மாநில அரசு கருதுகிறது. மிக அதிகமான போதை மது வகைகளே தாராளமாக கிடைக்கும்போது, மிக மிக குறைவான போதை தன்மை கொண்டதை நடைமுறைப்படுத்தினால், பொருளாதார ரீதியாகவும் மாநிலத்துக்கு உதவும் என்ற வகையில் அம்மாநில அரசு இந்த திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது.
ஒயின் உற்பத்தியில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக மகாராஷ்டிரா இருக்கிறது. அம்மாநிலத்தில் மட்டும் 40 முதல் 45 ஒயின் உற்பத்தி கூடங்கள் உள்ளன. அவை இந்தியாவில் புழக்கத்தில் இருக்கும் 80 விழுக்காடு ஒயினை உற்பத்தி செய்கின்றன. மேலும், இந்தியாவில் ஒயினின் சந்தை மதிப்பு சுமார் ஆயிரம் கோடி ரூபாய். அதில், 65 விழுக்காடு மகாராஷ்டிராவுக்கு கிடைக்கிறது என்பதால், இந்த சந்தையை மேலும் விரிவுபடுத்த அம்மாநில அரசு இத்தகைய நடவடிக்கையை எடுத்துள்ளது.
ALSO READ | 24 மணி நேரத்தில் 50க்கும் மேற்பட்டவர்களை கடித்த வெறி நாய்கள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR