3 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்திய முதல் மாநிலமாக மகாராஷ்டிரா திகழ்கிறது
முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தலைமையிலான மகா விகாஸ் அகாடி அரசாங்கம் தடுப்பூசி செலுத்தும் பணியில் கவனம் செலுத்தி வருவதை அடுத்து இந்த சாதனையை அடைந்துள்ளது.
மும்பை: மகாராஷ்டிரா 3 கோடி மக்களுக்கு கோவிட் -19 தடுப்பூசி செலுத்திய நாட்டின் முதல் மாநிலமாக உருவெடுத்துள்ளது என்று அதிகாரி ஒருவர் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
ஜூன் 25 அன்று பிற்பகல் 2 மணியளவில், இதுவரை மாநிலத்தில் செலுத்தப்பட்ட மொத்த COVID-19 தடுப்பூசி அளவு 3,00,27,217 ஆக அதிகரித்துள்ளது என்று சுகாதார கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் பிரதீப் வியாஸ் தெரிவித்தார்.
முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தலைமையிலான மகா விகாஸ் அகாடி அரசாங்கம் தடுப்பூசி செலுத்தும் பணியில் கவனம் செலுத்தி வருவதை அடுத்து இந்த சாதனையை அடைந்துள்ளது. குறிப்பாக கொரோனா வைரஸின் டெல்டா பிளஸ் பரவல் அச்சுறுத்தலைத் தடுக்கும் நோக்கத்துடன் மாநிலத்தில் தடுப்பூசி செலுத்தும் பணி முடக்கிவிடப்பட்டு உள்ளது.
நேற்றைய (வியாழக்கிழமை) தரவுப்படி, மாநிலத்தில் மொத்தம் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 60 லட்சம் பேரை (60,07,431) தாண்டியதை அடுத்து தடுப்பூசி செலுத்திக்கொள்ள அதிகமான மக்கள் வருவதை உறுதி செய்யுமாறு அனைத்து மாவட்ட பேரிடர் மேலாண்மை அதிகாரிகளுக்கும் (டி.டி.எம்.ஏ) மகாராஷ்டிரா அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது. இதுவரை மாநிலத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 119,859 ஆக உயர்ந்துள்ளது.
ALSO READ | தடுப்பூசி போட்டுக் கொள்ளாத அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது
"பொது விழிப்புணர்வு மூலம் தடுப்பூசி போட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். ஆரம்ப கட்டத்திலேயே 70 சதவீத மக்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான முயற்சிகாலை மேற்கொள்ள வேண்டும்.; பணியிடங்களில் தடுப்பூசிகளை போட ஊக்குவிக்க வேண்டும் போன்ற புதிய வழிகாட்டுதல்கள் அரசு அறிவித்துள்ளன.
ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தரவுகளின் அடிப்படையில், "இதுவரை நாட்டில் 307948744 தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை படிப்படியாக குறைந்து வருகிறது. பல மாநிலங்களில் ஒற்றை நாள் தொற்றின் அளவில் பெரும் வீழ்ச்சியைக் காண முடிகின்றது. தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24,49,577 ஆகவும் மற்றும் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 31,901 ஆக உயர்ந்துள்ளது.
உலகம் முழுவதும் டெல்டா பிளஸ் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதுவரை 11 நாடுகளில் 200 பேருக்கு டெல்டா பிளஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
ALSO READ | Tamil Nadu: 3 பேருக்கு டெல்டா பிளஸ் கொரோனா உறுதி - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR