Maharashtra Lok Sabha Election Result 2024: நாடு முழுவதும் இன்று காலை முதல் நடைபெற்று வரும் மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையை ஒட்டுமொத்த நாடுமே உன்னிப்பாக கவனித்து வருகிறது. மொத்தம் 48 மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட மகாராஷ்டிராவில் ஏப்ரல் 19 முதல் மே 20 வரை ஐந்து வெவ்வேறு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. அடுத்த 5 ஆண்டுகளுக்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை எம்.பிக்கள் மகாராஷ்டிராவை பிரதிநிதித்துவப்படுவார்கல்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்த 48 எம்.பி.க்கள் யார் என்பது இன்னும் சில மணி நேரங்களில் முடிவாகிவிடும். அண்மை நிலவரபப்டி, 2 லட்சம் வாக்குகள் முன்னிலை பெற்று காங்கிரஸின் பெண் வேட்பாளர் பிரதிபா தநோர்கர் முன்னிலையில் இருக்கிறார், அவரது வெற்றி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. அவர் பாஜகவின் சுதிர் முங்கண்டிவாரை தோற்கடித்து, மக்களவைக்கு செல்வார்.


பாஜகவுக்கு மற்றொரு பின்னடைவாக, பலேகில்லாவில் சரத் பவாரின் வேட்பாளர் முன்னிலையில் உள்ளார். பாஜகவின் கோட்டையாக கருதப்படும் அகமதுநகர் தொகுதியில், 15 சுற்று வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு, நிலேஷ் லங்கன் 14849 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார். நிலேஷ் லங்கா 3 லட்சத்து 61 ஆயிரம் வாக்குகளும், பாஜகவின் சுஜய் விகே படால் 3 லட்சத்து 51 ஆயிரத்து 320 வாக்குகளும் பெற்றனர்.


மகாராஷ்டிரா நிலவரம் என்ன?


இந்த மக்களவை தேர்தலில் மகாராஷ்டிராவில் என்டிஏ, இந்தியா கூட்டணிக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணும் பணிகள் இன்று நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. அதன்படி மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 272 தொகுதிகளில் வெற்றி பெறும் கட்சி மத்தியில் ஆட்சியைப் பிடிக்கும். நாடு முழுவதும் பாஜக கூட்டணி தற்போது 295 இடங்களில் முன்னிலை வகிக்கும் நிலையில் இந்தியா கூட்டணி கட்சிகள் 229 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. மற்ற கட்சிகள் 35 இடங்களில் முன்னிலை வகிக்கின்றன. 


சமீபத்திய நிலவரப்படி, பாஜக 12 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது என்றால், காங்கிரஸ் 11 இடங்களில் வெற்றி பெறும் நிலையில் உள்ளது. சிவசேனா (யுபிடி) 10 இடங்களிலும், NCP (SP) 7 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. சிவசேனா (ஷிண்டே) 6 இடங்களில் முன்னிலை என்றால், NCP (AP) 1 இடத்திலும் ஒரு சுயேச்சை வேட்பாளரும் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெறும் நிலையில் உள்ளனர். 


தலைகீழான எக்சிட் போல் கணிப்பு


மகாராஷ்டிராவில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான மஹாயுதி தெளிவான வெற்றியைப் பெற்றுள்ளதாக எக்சிட் போல் தெரிவித்திருந்தாலும், தற்போட்து மாநிலத்தின் 48 மக்களவைத் தொகுதிகளில் 29ல் மகா விகாஸ் அகாதி (எம்விஏ) முன்னிலை பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட வாக்கு எண்ணிக்கை தகவல்கள் காட்டுகின்றன.


சமீபத்திய நிலவரம் என்ன?


கருத்துக் கணிப்புகள் மகாராஷ்டிராவில் மஹாயுதிக்கு 22 முதல் 35 இடங்களும், எம்.வி.ஏ-க்கு 15 முதல் 26 இடங்களும் கிடைக்கும் என்று கணித்திருந்தது. ஆனால் இன்று நிலைமை கிட்டத்தட்ட தலைகீழாகத் தெரிகிறது.


மேலும் படிக்க | Jammu Kashmir Lok Sabha Election Result 2024: ஜம்முவில் இரண்டு இடங்களில் பாஜக முன்னிலை


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ