புது டெல்லி: பாஜகவுடன் கூட்டு சேர்ந்து மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆட்சி அமைப்பதற்காக தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அஜித் பவார் கடந்த சனிக்கிழமை அன்று, மாநிலத்தின் துணை முதலமைச்சர் பதவியை ஏற்றுக் கொண்டார். அவருடன் பாஜகவை சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ் மாநிலத்தின் முதலமைச்சர் பதவியில் அமர்ந்தார். ஒருபக்கம் NCP - காங்கிரஸ் - சிவசேனா எம்.எல்.ஏ-க்கள் சேர்ந்து மாநிலத்தில் கூட்டணி ஆட்சி அமைக்க பேச்சுவாரத்தை நடத்தி வந்த நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அஜித் பவார், பாஜக பக்கம் சென்றது அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியது. மாநிலத்தில் யார் தலைமையில் ஆட்சி அமையப்போகிறது என்ற பரபரப்பு உச்சக் கட்டத்தை அடைந்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த இரண்டு நாட்களா பல மாற்றங்கள் மஹாராஷ்டிரா அரசியல் நிகழ்ந்து வந்தது. மகாராஷ்டிராவில் பாஜக தலைமையிலான அரசாங்கத்தை அமைப்பதற்கு எதிராக என்.சி.பி, காங்கிரஸ் மற்றும் சிவசேனா கூட்டாக தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று வழங்கியது. அந்த தீர்ப்பில் நாளை மாலை 5 மணிக்கு முன்னதாக நம்பிக்கை வாக்கெடுப்பினை நடத்த வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது. மேலும் சட்டசபை நடவடிக்கைகள் நேரடியாக ஒளிபரப்பு செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டது. 


இதனையடுத்து மஹாராஷ்டிரவில் துணை முதல்வர் பதவியை அஜித் பவார் ராஜினமா செய்ததால், அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவரது ராஜினாமா கடிதத்தை முதல்வர் தேவேந்திர பட்னவிஸிடம் அளித்துள்ளார். அது மகாராஷ்டிரா அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரை அடுத்து முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், தனது தனது பதவியை ராஜினாமா செய்தார்.


இவர்களின் ராஜினாமாவை அடுத்து, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைவது ஏறக்குறைய உறுதியாகி விட்டது. இந்த கூட்டணி கட்சிகளின் ஒப்பந்தம் படி, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வராக பதவி ஏற்கலாம் எனத்தகவல்கள் வந்துள்ளன.


இந்தநிலையில், அஜித் பவாரின் ராஜினாமாவை தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர்கள் கையில் வைத்திருந்த பதாகையில் "அஜித் தாதா ஐ லவ் யூ" எனக் குறிப்பிடப்பட்டு இருந்தது. 



மகாராஷ்டிரா துணை முதல்வர் பதவியை அஜித் பவார் ராஜினாமா செய்துள்ள நிலையில், அஜித் தங்களுடன் இருப்பதாக சிவசேனா தலைவர் சஞ்சய் ரவுத் தெரிவித்துள்ளார். மேலும் மகாராஷ்டிராவின் முதல்வர் அஜித் பவார் தான் எனவும், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அவர் முதல்வராக இருப்பார் எனவும் சஞ்சய் ரவுத் குறிப்பிட்டுள்ளார்.


இதனிடையே தற்போது மகாராஷ்டிர சட்டசபையின் இடைக்கால சபாநாயகராக பாஜக-வின் MLA காளிதாஸ் கோலம்ப்கர் பதவியேற்றுள்ளார்.


முன்னதாக அஜித் பவார் தேவேந்திர பட்னவிஸை ஆதரித்த நிலையில் சனியன்று காலை முதல்வர், துணை முதல்வர் பதவியினை முறையே பட்னாவிஸ் மற்றும் அஜித் பவார் ஏற்றுக்கொண்டனர். என்றபோதிலும் இன்று, பதவியேற்ற நான்காவது நாளில், இரு தலைவர்களும் தங்கள் பயணத்தை 80 மணி நேரத்தில் முடித்துக்கொண்டனர்.


உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.