தனியார் நிறுவனங்களில் உள்ளூர் இளைஞர்களுக்கு 80 சதவீத வேலை வாய்ப்பு வழங்கப்படும் என சட்ட சபை கூட்டு கூட்டத்தில் கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி அறிவித்தார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டெல்லி: மகாராஷ்டிரா கவர்னர் B.S.கோஷ்யாரி "மண்ணின் மகன்களுக்கு" தனியார் துறை வேலைகளில் 80% இடஒதுக்கீடு உறுதி செய்ய மாநில அரசு ஒரு சட்டத்தை இயற்றும் என்று பகத்சிங் கோஷ்யாரி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.


விதான் பவனில் மாநில சட்டமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றியபோது கோஷ்யரி இந்த அறிவிப்பை வெளியிட்டார். சேனா-NCP-காங்கிரஸ் இணைப்பின் மகா விகாஸ் அகாடி அரசாங்கம் வேலையின்மை குறித்து அக்கறை கொண்டுள்ளது என்றார். 


இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில்; மகாராஷ்டிராவில் வேலைவாய்ப்பின்மை பிரச்சினையில் ‘மகா விகாஷ் முன்னணி' அரசாங்கம் அக்கறையுடன் செயல்படும். தனியார் நிறுவன வேலை வாய்ப்பில் மண்ணின் மைந்தர்களுக்கு 80 சதவீத இடஒதுக்கீடு கிடைப்பதற்கு வழிசெய்யும் வகையில் சட்டம் இயற்றப்படும். மாநிலத்தில் மலிவு விலை உணவகங்கள் திறக்கப்பட்டு சாமானிய மக்களுக்கு 10 ரூபாயில் சாப்பாடு வழங்கப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகள் கட்டப்படும்.


மாநிலத்தின் பொருளாதார உண்மை நிலை குறித்து விரைவில் அறிக்கை வெளியிடப்படும். அதில் பெருளாதார நிலை மற்றும் தற்போதைய நிதிநிலைமைகள் குறித்து விரிவாக தெரிவிக்கப்படும். ஒரு ரூபாய் கிளினிக்குகள் திறக்கப்படும். 34 மாவட்டங்களில் 349 தாலுகாக்களில் பருவம் தவறி பெய்த மழையால் பயிர்கள் நாசம் அடைந்து விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். விவசாயிகளின் துயரை துடைக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்கவும் இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும். முற்போக்கு சமூகம் மக்களுக்கான வாய்ப்பை வழங்குகிறது.