ஆந்திரா முதலவர் சந்திரபாபு நாயுடு-க்கு மகாராஷ்டிரா மாநிலத்தில் தடையை மீறி நுழைந்த வழக்கில் நீதிமன்றம் பிரபித்துள்ளது...! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மகாராஷ்டிரா மாநிலம் நான்ந்டெட் பகுதியில் கோதாவரி ஆற்றின் குறுக்கே அம்மாநில அரசு பாப்ஸி என்ற அணையைக் கட்டியது. இந்த அணை கட்டுமானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, 2010-ம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு, அவரது கட்சி எம்.எல்.ஏகளுடன் அணையை முற்றுகையிட போவதாக அறிவித்தார்.


அதனையடுத்து, அப்பகுதியில் மகாராஷ்டிரா அரசு 144 தடை உத்தரவைப் பிறப்பித்தது. தடையை மீறி நுழைய முயன்ற சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட 30 எம்.எல்.ஏக்கள், 8 எம்.பிக்கள் அப்போது கைது செய்யப்பட்டனர். இதுதொடர்பான வழக்கு துர்ஹமபாத் நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது. இந்த வழக்கில், ஆஜராக சந்திரபாபு நாயுடு பலமுறை சம்மன் அனுப்பப்பட்டது. 


ஆனால், ஒருமுறைகூட சந்திரபாபு நாயுடு ஆஜராகவில்லை. இந்தநிலையில், சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட 16 பேருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், மோடிக்கு பாடம் புகட்டப்படும் எனவும் கட்சி ஆர்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.