Viral: என்சிசி மாணவர்களை கொடூரமாக அடித்த சீனியர் சஸ்பெண்ட்
Maharastra NCC Viral Video: என்சிசி மாணவர்களை, ஒரு சீனியர் மாணவர் தடியால் கொடூரமாக தாக்கும் வீடியோ வைரலானதை அடுத்த அவரை கல்லூரி சஸ்பெண்ட் செய்தது.
Maharastra NCC Viral Video: மகாராஷ்டிராவின் தானேயில் உள்ள கல்லூரியில் என்சிசி கேடட்களை அவர் தடியால் கொடூரமாக அடிக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து, அந்த மாணவர் நேற்று கல்லூரியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதாக மகாராஷ்டிரா தேசிய கேடட் கார்ப் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஜோஷி பெடேகர் என்ற கல்லூரியில் நடந்த என்சிசி பயிற்சியின் போது இந்த சம்பவம் நடந்துள்ளது. நேஷனல் கேடட் கார்ப்ஸின் (என்சிசி) எட்டு ஜூனியர் மாணவர்கள் சீனியர் ஒருவரால் கசையடிக்கு உட்படுத்தப்பட்டதை வைரலான வீடியோ ஒன்று வெளிச்சத்திற்கு கொண்டுவந்தது. கேடட்கள் சேற்றுப் பகுதியில் புஷ்-அப் நிலையில் கால்களும், தலையும் தரையைத் தொட்டு கைகளை முதுகிற்கு மேல் மடக்கிக் கொண்டு நிற்பதை அந்த வீடியோவில் காணலாம். அந்த நிலையில்ல், தடியைக் கொண்டு அந்த சீனியர் கேடட் அவர்களை அடித்தது அதில் பதிவாகியிருந்தது.
இதுகுறித்து, மகாராஷ்டிர தேசிய கேடட் கார்ப் வெளியிட்ட அறிக்கையில்,"இந்த நடவடிக்கை மிகவும் கண்டிக்கத்தக்கது. இது எந்தவொரு என்சிசி பயிற்சி அல்லது ஒழுங்கமைக்கப்பட்ட செயல்பாட்டின் ஒரு பகுதியும் இல்லை. மேற்படி கல்லூரியின் முதல்வரின் அறிக்கையின்படி குற்றவாளி ஒரு கேடட் அல்லது முன்னாள் கேடட் என்பதால் என்சிசி மிகவும் கலக்கமடைந்துள்ளது. கல்லூரியால் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்" என குறிப்பிட்டுள்ளது.
வைரல் வீடியோ:
"என்சிசியில் நாங்கள் தனிப்பட்ட முன்மாதிரியை வைப்பதன் மூலம் எங்கள் கேடட்களில் சமூக மதிப்புகள் மற்றும் இராணுவ நெறிமுறைகளை புகுத்துகிறோம், இந்த நடவடிக்கைக்கும் அதற்கும் எந்த தொடர்பும் இல்லை" என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் கார்போரல் பாணியில் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜோஷி பெடேகர் கல்லூரியின் முதல்வர் சுசித்ரா நாயக், மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் முன் வந்து இந்த செயலுக்குப் பின்னால் உள்ள சீனியரை கண்டறிய உதவ வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும் இது தொடர்பாக புகார் அளிக்குமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார். இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த நாயக், அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், யாரும் இதில் இருந்து தப்பிக்க மாட்டார்கள் என்றும் கூறினார். நாயக் கூறுகையில், "மாணவர்களை அடிக்கும் வீடியோவில் காணப்படும் நபர் ஆசிரியர் இல்லை. இதுபோன்ற நடத்தையை நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம். இதை எதிர்கொண்ட மாணவர்கள் பயப்பட வேண்டாம்" என்றார்.
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (என்சிபி) மூத்த தலைவர் ஜிதேந்திர அவாத் இந்த சம்பவம் குறித்து அதிர்ச்சியை வெளிப்படுத்தியதுடன், இந்த விவகாரத்தில் அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரினார்.
மேலும் படிக்க | 'டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதா' இந்திய நாடாளுமன்றத்தில் மசோதா அறிமுகம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ