இந்தியாவில் மீண்டும் பீதியை கிளப்பும் கொரோனா! ஒரே நாளில் 7830 பேருக்கு தொற்று!
இந்தியாவில், மூன்று முறை கொரோனா அலை ஏற்பட்டுள்ளது. இதில் பாதிப்புகளும் மிக மோசமாகவே இருந்தது என்பதால், தற்போதைய பரவல் அச்சத்தை உண்டாக்கியுள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், ஒரே நாளில் இப்போது 7830 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவத் தொடங்கிய நிலையில், இதுவரை இந்தியாவில், மூன்று முறை கொரோனா அலை ஏற்பட்டுள்ளது. இதில் பாதிப்புகளும் மிக மோசமாகவே இருந்தது என்பதால், தற்போதைய பரவல் அச்சத்தை உண்டாக்கியுள்ளது.
கொரோனா பரவல் தொடங்கிய பிறகு நாம் எடுத்த பல்வேறு நடவடிக்கைகளால் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்தது. கொரோனா தடுப்பூசிகள் தீவிர கொரோனா பாதிப்பு ஏற்படுவதை வெகுவாக குறைத்தது. மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் மிகச் சிறப்பாகவே இருந்தது எனலாம். நாடு தழுவிய தடுப்பூசி போடும் நடவடிக்கையின் கீழ் இதுவரை 220.66 கோடி மொத்த தடுப்பூசி டோஸ்கள் (95.21 கோடி இரண்டாவது டோஸ் மற்றும் 22.87 கோடி பூஸ்ட டோஸ் வழங்கப்பட்டுள்ளன.
இந்தியாவில், கடந்த 24 மணிநேரத்தில் 441 டோஸ்கள் கொடுக்கப்பட்டன. இந்தியாவில் தற்போது தொற்று பாதிப்பு உள்ளவர்கள் எண்ணிக்கை தற்போது 40,215 ஆக உள்ளது. தொற்று பாதிப்பு உள்ளவர்களின் எண்ணில்லை 0.09%. நோயிலிருந்து குணமாகும் விகிதம் தற்போது 98.72%.
மேலும் படிக்க | கோவையில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த இரண்டு பேர் பலி!
கடந்த 24 மணிநேரத்தில் 4,692 குணமாகியுள்ளதை அடுத்து, குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை
4,42,04,771 என்ற அளவில் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 7,830 புதிய தொற்று பாதிப்புகள் பதிவாகியுள்ளன. தொற்றுக்கான சோதனையில் கொரோனா தொற்று உறுதிபடுத்தப்படும் தினசரி விகிதம் (3.65%). வாராந்திர நேர்மறை விகிதம் (3.83%) இதுவரை நடத்தப்பட்ட மொத்த சோதனைகள் 92.32 கோடி; கடந்த 24 மணி நேரத்தில் 2,14,242 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. னகடந்த 24 மணி நேரத்தில் 11 இறப்புகள் ஏற்பட்டுள்ளன.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ