புதுடெல்லி: பண்டிகை காலத்தில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என தொடர்ந்து எச்சரிக்கை விடுக்கபட்ட நிலையில், மத்திய அரசு பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரபடுத்தியது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில், தில்லி காவல்துறையின் சிறப்பு பிரிவு செவ்வாய்க்கிழமை லக்ஷ்மி நகர் பகுதியில் இருந்து பாகிஸ்தான் பயங்கரவாதியை கைது செய்தது. மொஹம்மது அஸ்ரஃப் என்பது இந்திய நாட்டவரின் போலி அடையாள அட்டையுடன் வசைத்து வந்தார். அவரிடம் இருந்து ஆயுதங்கள், வெடி மருந்துகள், அதிநவீன துப்பாக்கிகள், ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர். இதை அடுத்து பெரும் பயங்கரவாத தாக்குதல் சதி முறியடிக்கப்பட்டுள்ளது.


பாகிஸ்தானின் (Pakistan) பஞ்சாப் மாகாணத்தை சேர்ந்த, அந்த பயங்கரவாதிக்கு எதிராக சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம், ஆயுதச் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாக போலீசார் தெரிவித்தனர். தவிர, அவர் தங்கிருந்த லக்‌ஷ்மி நகர் இடத்தில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது 


ALSO READ | ஆப்கானிஸ்தான் மீதான G20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்..!!!


பண்டிகை காலத்தை முன்னிட்டு, பயங்கரவாத அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு தேசிய தலைநகர் முழுவதும் சந்தைகள் மற்றும் வணிக வளாகங்கள் உள்ளிட்ட நெரிசலான பகுதிகளில் ரோந்து பணியை தில்லி போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர். அதிக மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில், காவல்துறை பாதுகாப்பு சோதனைகளை நடத்துகிறது என்று ஒரு மூத்த போலீஸ் அதிகாரி கூறினார். 


டெல்லி போலீஸ் கமிஷனர் ராகேஷ் அஸ்தானா, காவல் துறை அதிகாரிகளுக்கு பிறப்பித்த உத்தரவில், பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கவும், முக்கிய இடங்களில் போலீஸ் காவலை அதிகரிக்கவும், தேசிய தலைநகர் முழுவதும் இரவு ரோந்து பணியை தீவிரப்படுத்தவும் அறிவுறுத்தியதை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


ALSO READ | நிலக்கரி பற்றாக்குறை: இந்தியாவும் ‘இருளில்’ மூழ்குமா... மத்திய அரசு கூறுவது என்ன..!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR