‘மேக் இன் இந்தியா’ அல்ல இது ‘ரேப் இன் இந்தியா’: ஆதிர் ரஞ்சன் சவுத்ரி
மேக் இன் இந்தியாவிலிருந்து ரேப் இன் இந்தியாவை நோக்கி நம் தேசம் மெதுவாக செல்வதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது!
மேக் இன் இந்தியாவிலிருந்து ரேப் இன் இந்தியாவை நோக்கி நம் தேசம் மெதுவாக செல்வதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது!
மக்களவை காங்கிரஸ் கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி பெயருக்கு ஏற்றபடி எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடிய பேர் வழி. முணுக்கென்று கோபத்தில் மூக்கும் காதும் சிவந்துவிடும். இப்படிப்பட்ட நிலையில் உணர்ச்சிவசப்பட்டு அவர் உதிர்க்கும் வார்த்தைகள் அவரது கட்சியின் மதிப்புக்கு வேட்டு வைத்து விடுகிறது. சொந்த அணிக்கு எதிராக செல்ப் கோல் அடிப்பது போல. மக்களவையில் அவர் செவ்வாய்க்கிழமை பேசிக்கொண்டிக்கையில் அப்படித்தான் ஆகிவிட்டது. உன்னாவ் பாலியல் வழக்கு பற்றிய விவாதத்தின்போது ஆவேசமாக பேசிக்கொண்டிருந்த சௌத்ரி திடீரென, சொந்த நாட்டையே ரேப் இன் இந்தியா என கேவலமாக குறிப்பிட்டார்.
இது குறித்து, நாடாளுமன்ற விவாதத்தின்போது அவர் கூறுகையில்; "சார் இந்த அவையில உன்னாவ் ரேப் பத்தி விவாதிச்சிட்டுருக்கோம்… ஆனா அந்த உன்னாவ் பெண் 95 பர்சன்ட் கொளுத்தப்பட்டு உயிரை விட்டிருப்பது நம்மை சங்கடப்படுத்துகிறது… இதுல இன்னும் வருத்தம் என்னன்னா எதையும் வெளிப்படையாக பேசக்கூடிய நமது பிரதமர் இதுபற்றி எந்த அறிக்கையும் தரவில்லை… சார்… இந்தியா மெல்ல மேக் இன் இந்தியாவுக்கு பதிலா ரேப் இன் இந்தியாவா மாறிட்டிருக்கு… அதனால இந்தியாவ மேக் இன் இந்தியா என்பதற்கு பதிலாக ரேப் இன் இந்தியான்னுதான் சொல்ல வேண்டிருக்கு"
மக்களவையில் காங்கிரஸ் கட்சித்தலைவராக ஆதிர் ரஞ்சன் சௌத்ரி உள்ளார். ஆனால் நாட்டின் மிகப்பெரிய அமைப்பான நாடாளுமன்றத்தில் பேசும் வார்த்தைகள் உலகின் மூலை முடுக்கெல்லாம் பரவும் என்ற இங்கிதம் கூட தெரியவில்லை. இதனால்தான் இந்தியாவை ரேப் இன் இந்தியா என அழைத்துள்ளார். இதன்மூலம் அவரது வாயை அவராலேயே கட்டுப்படுத்த முடியாது என்பதை சௌத்ரி நிரூபித்துவிட்டார். கடந்த 3ஆம் தேதிதான் இதே அவையில் அவர் நிதியமைச்சர் நிர்மலாவை 'நிர்பலா' (நிர்பலா என்றால் பலவீனமானவர் என்று அர்த்தமாகும்) என்று அழைத்ததால்... சரியாக வாங்கிக் கட்டிக் கொண்டார்" என அவர் கூறினார்.
மேலும், "உங்கள நான் மதிக்கிறேன்… உங்க நிலைமைய சில நேரத்துல பாக்குறப்போ உங்களை நிர்மலா சீதாராமன்னு சொல்றதுக்கு பதிலா நிர்பலா சீதாராமன்னு சொன்னா என்னன்னு தோணுறது சரியா… ஏன்னா நீங்க ஒரு அமைச்சர் ஆனா உங்களுக்கு வேண்டியத செய்துகொள்ள முடியுமா என்று உங்களுக்கே தெரியவில்லை.."
மக்களவையில் ஒரு பெண் எம்.பி. குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் கூறிய இத்தகைய மட்டமான கருத்தைக் கேட்டு முழு சபையும் திகைத்துப்போனது… ஆனால் அதே மக்களவையில் பொறுமையற்றவர்களுக்கு பொறுமையுடன் நிர்மலா சீதாராமன் இப்படி பதிலளித்தார்...- "நான் நிர்மலா… எப்பவுமே நான் நிர்மலாதான்… என்னோட கட்சியினாலயும், பிரதமர் மோடியினாலயும் நான் எப்போதும் தனியாள் கிடையாது..."
இப்படியொரு நெத்தியடி பதில் கிடைத்தபிறகும் தான் பேசியதற்காக அவமானப்பட்டதாக சௌத்ரி உணரவில்லை..
ஏனென்றால் முன்கோபம் அவரது உடன் பிறந்த குணம். குடியுரிமை சட்டத் திருத்த மசோதா மீதான விவாதத்தின்போது பிரதமர் மோடியையும், உள்துறை அமைச்சர் அமீத் ஷா பற்றியும் செய்த விமர்சனங்களைப் பார்த்தால் புரியும். அவருக்கு கொஞ்சமாவது பொது அறிவு இருக்குமா என்ற சந்தேகமும் எழும்புகிறது. அவர் என்ன கூறினார் தெரியுமா?. -"அமீத் ஷா ஜீ… நரேந்திர மோடி ஜீ நீங்கள்ளாம் ஊடுருவிகள்… குஜராத்ல இருந்து தில்லிக்கு வந்திருக்கீங்க… நீங்களும் ஒரு ஊடுருவிகள்தான்"
மதிப்புக்குரிய பதவியில் இருக்கும் ஒருவர் இப்படி பேசலாமா என்ற கண்டனக்கணைகளுக்கு அவர் ஆளானார். ஆதிர் ரஞ்சனின் பிரச்னையே சீரியஸான விஷயங்கள் கூட அவருக்கு கேளிக்கையாக தெரிவதுதான்… அதனால்தான் கடந்த ஜூன் 24 ஆம் தேதியன்று மக்களாட்சியின் பிரமாண்டமான ஆலயத்தில் அவர் காது கொடுத்து கேட்கமுடியாத அளவுக்கு பிரதமரைப்பற்றி பேசிய வார்த்தைகளை கொட்டினார்...- "எங்கே மா கங்கா… எங்கே...."
பொறுமையிழந்து ஆவேசத்துடன் பேசிய ரஞ்சன் சௌத்ரி நாட்டின் பிரதமரை என்ன சொல்லி அழைத்தார் என்பது புரிந்திருக்கும். புரியவில்லை என்றால் அவர் சொல்வதை கவனியுங்கள் புரியும்...- நான் அரசியல்ரீதியா பேசுறேன்…. இதுமாதிரி யாருகிட்டயும் பேசல… நாழின்னு நான் சொன்னேன்.எனக்கு ஹிந்தி அவ்வளவு நல்லா வராது… நாழின்னு சொன்னது கால்வாய் அர்த்தத்தில்.... சாக்கடை என்று சொல்லவில்லை. பிரதமரைப் பற்றி ஆதிர் ரஞ்சன் நாடாளுமன்றத்தில் என்ன மாதிரியான கருத்துக்களைத் தெரிவித்திருக்கிறார் என்பதை இப்போது நீங்கள் புரிந்துகொண்டிருக்க வேண்டும் .... ஆனால் நாக்கு கட்டுப்படுத்தப்படாதபோது, பெரும்பாலும் அவரிடமிருந்து வெளிப்படும் வார்த்தைகளின் அம்புகள் அவரது சொந்த மார்பிலேயே பாய்கின்றன... மக்களவையில் பொறுமையற்று பேசுவதாக கூறி சோனியா காந்தி ஆகஸ்ட் 6 ஆம் தேதி, தன்னை வருத்தப்படுத்தியதாக ஒரு அறிக்கையை சௌத்ரி வெளியிட்டார்.
அதில்,- " நீங்கள் சொல்லும் இந்த காஷ்மீர் ஒரு உள் விவகாரம் ... ஆனால் இன்னும் ஐநா சபை மக்களை அங்கு கண்காணித்து வருகிறது... ஐக்கிய நாடுகள் 1948 முதல் கண்காணித்து வருகின்றது. பின்னர் ஏன்… இதைச் சொல்ல வேண்டும்" என்றார் சௌத்ரி. காஷ்மீர் பிரச்னையில் இந்திய நிலைப்பாட்டுக்கு எதிரான இந்தக் கருத்து பாகிஸ்தானுக்குத்தான் சாதகமாக அமையும் என்பதை தெரிந்தே பேசினாரா என்பது இங்கே தொக்கி நிற்கும் கேள்வி. பல சந்தர்ப்பங்களில் தனது கட்சிக்காக சுய கோல் அடித்த ஆதிர் ரஞ்சனுக்கு அவரது கட்சி ஏன் ஆலோசனை வழங்கவில்லை என்பது கேள்வி .... இது காங்கிரஸ் திட்டத்தின் ஒரு பகுதியா? .... அப்படியானால், அது அரசியல் லாபத்தின் ஒரு உத்தி என்று சொல்லக்கூடாதா... அதற்க்கு பப்ளிக் பதில் சொல்வார்கள்!" என அவர் கூறினார்.