கேரளாவில் குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் சிக்கிய பென்-டிரைவில் பிரதமர்மோடி மற்றும் சில மத்திய மந்திரிகளின் புகைப்படங்களும் இடம் பெற்றிருந்தன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கேரளாவில் கலெக்டர் அலுவலவகத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு குண்டு வெடித்தது. இந்த இடத்தில் தேசிய புலனாய்வு பிரிவினர் விசாரணை நடத்தினர். அவர்கள் நடத்திய விசாரணையில், கலெக்டர் அலுவலக வளாகத்தில் வெடித்தது பிர‌ஷர் குக்கர் குண்டு என தெரிய வந்தது. குண்டு வெடித்த இடத்தில் சோதனை நடத்தினர் போலீசார். அங்கு சில துண்டு பிரசுரங்கள் சிதறி கிடந்தன. மேலும் பென்-டிரைவ் ஒன்றை கண்டுபிடித்தனர். 


அதனை பரிசோதித்த போது, அந்த  பென்-டிரைவில் இது போன்ற மேலும் குண்டு வெடிப்புகள் பல நடைபெறும் என்றும், பிரதமர்மோடி மற்றும் சில மத்திய மந்திரிகளின் புகைப்படங்களும் இடம் பெற்றிருந்தன. இதனை போலீசார் நிருபர்களிடம் தெரிவித்தார். அத்துடன் உத்தரபிரதேசத்தில் மாட்டு இறைச்சி வைத்து இருந்தார் என்ற வதந்தியில் முகமது அக்லாக் என்பவர் கொல்லப்பட்டது பற்றிய குறிப்பும் காணப்பட்டது. 


இந்த தகவல் உடனடியாக மத்திய உளவுப்பிரிவுக்கும், தேசிய புலனாய்வு துறை அதிகாரிகளுக்கும் தெரிவிக்கப்பட்டது. தேசிய புலனாய்வு அதிகாரிகள் நேற்று அங்கு சென்று ஆய்வு செய்தனர். சில மாதங்களுக்கு முன்பு கொல்லம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் தான் இந்த குண்டு வெடிப்பையும் நடத்தி இருக்கலாம் என சந்தேகிப்பதாக அவர்கள் தெரிவித்தனர். 


இச்சம்பம் குறித்து முதல்-மந்திரி பினராய் விஜயன் கூறியதாவது:- கேரளாவின் அமைதியை சீர்குலைக்க சதி நடக்கிறது. மலப்புரம் குண்டுவெடிப்பு பற்றி தீவிர விசாரணை நடந்து வருகிறது. விசாரணைக்கு பின்னரே இதன் பின்னணியில் உள்ள விவரங்கள் தெரிய வரும். அதற்கு முன்பு விசாரணையை சீர்குலைக்கும் வகையில் யாரும் தேவையில்லாத கருத்துக்களை வெளியிட வேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டார்.