மும்பையை சேர்ந்த நாய் ஒன்று 4 இளைஞர்களால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கூட்ட பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட கரேஜ் என்னும் அந்த நாய் குட்டி, கடந்த நவம்பர் 21-ஆம் பரிதாபமாக பலியாகியுள்ளது. இந்த விவகாரம் குறித்து அப்பகுதியை சேர்ந்த அரசு சாரா மிருக பாதுகாப்பு நிறுவனம் காவல்துறையில் புகார் அளித்துள்ளது.


இச்சம்பவம் குறித்து விலங்குகளுக்கு எதிரான கொடுமை தடுப்புச்சட்ட பிரிவு 11-ன் கீழ் வழக்கு பதிவு செய்துள்ள மும்பை காவல்துறையினர், மீட்கப்பட்ட நாயின் சடலத்தினை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.



மருத்துவ பரிசோதனையில் பாலியல் வன்கொடுமை காரணமாக ஏற்பட்ட அதிக ரத்த இழப்பு மற்றும் உடல் சிதைவு காரணமாக நாய் இறந்துள்ளதாக தெரியவந்துள்ளது.


இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தெரிவிக்கையில்... இச்சம்பவத்தில் ஈடுப்பட்ட மனித மிருகங்களை தேடி வருகின்றோம். அப்பகுதியி ரிக்ஷா ஓட்டுநர்களின் உதவியோடு தேடுதல் பணி நடைப்பெற்று வருகின்றது என குறிப்பிட்டுள்ளனர்.