வெளிநாடு செல்வதற்கு முன்பாக நிதியமைச்சர் அருண் ஜெட்லியை தான் சந்தித்ததாக விஜய் மல்லையா கடந்த 11 ஆம் தேதி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இதை இந்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி மறுத்துள்ளார். இது தொடர்பாக பல சர்ச்சைகள் எழுந்து வரும் நிலையில் நேற்று டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்பொழுது அவர் குற்றவாளியான விஜய் மல்லையா தப்பிச்செல்ல அருண் ஜெட்லி தான் காரணம், எனவே அவர் பதவியை ராஜினமா செய்ய வேண்டும் எனக் கூறினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதற்க்கு பாஜக தரப்பில், ராகுல் காந்தி தான் ராஜினமா செய்ய வேண்டும். காந்தி குடும்பத்துக்கும் மல்லையாவுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (UPA) ஆட்சியில் தான் விஜய் மல்லையாவுக்கு கடன்களை வழங்குவதற்காக வங்கிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்த அனுமதி அனைத்தும் விதிமுறைகளுக்கு எதிராக உள்ளது என குற்றச்சாட்டியது. 


விஜய் மல்லையா விவகாரத்தில் பாஜக மற்றும் காங்கிரஸ் ஒருவரையொருவர் குறைகூறிக்கொண்டு இருந்த நிலையில், பாஜக மூத்த தலைவர் ராஜ்யசபா எம்.பி சுப்ரமணியன் சுவாமி தனது ட்விட்டர் பக்கத்தில், விஜய் மல்லையாவுக்கு எதிரான லுக் அவுட் நோட்டீஸ் நீர்த்துப்போகச் செய்யப்பட்டதும், மல்லையா தப்பி செல்வதற்கு முன்பு நிதியமைச்சரிடம் கூறியுள்ளார். இவை இரண்டுமே மல்லையா தப்பிச்செல்ல காரணமாக இருந்தது என கருத்து தெரிவித்துள்ளார்.


பாஜக மூத்த தலைவர் ராஜ்யசபா எம்.பி சுப்ரமணியன் சுவாமி கருத்தை அடுத்து சி.பி.ஐ. மீதும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 25 ஆம் நாள் லுக்-அவுட் நோட்டீஸ் திருத்தம் செய்யப்பட்டதன் மூலம் விஜய் மல்லையா தப்பி செல்ல முக்கிய காரணம் என கூறப்பட்டு வருகிறது. 


இதற்க்கு சி.பி.ஐ. தரப்பு விளக்கம் அளித்துள்ளது. மல்லையா விவகாரத்தில் எங்கள் முடிவுகள் தவறானவை. அவர் கண்காணிக்கவே எங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. கைது செய்ய அல்ல என சி.பி.ஐ. விளக்கம் அளித்துள்ளது.


இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், மல்லையா தப்பிச் சென்றதில் பிரதமர் மோடிக்கு பங்கு இருக்கிறதா? என கேட்டுள்ளார். 


அவர் கூறியதாவது:


 



மல்லையாவின் கிரேட் எஸ்கேப்புக்கு சிபாரிசு செய்தது சிபிஐ. லுக்-அவுட் நோட்டீஸ் மாற்றி மல்லையாவை தப்பிக்க வழிசெய்தது. சிபிஐ-க்கு லுக்-அவுட் நோட்டீஸ் மாற்ற யார் சொன்னது. சிபிஐ அமைப்பு நேரடியாக பிரதமர் மோடியின் கண்காணிப்பில் உள்ளது. எனவே பிரதமரின் ஒப்புதல் இல்லாமல் லுக்-அவுட் நோட்டீஸ் எப்படி மாற்றப்பட்டது என கேட்டுள்ளார்.