மத்திய அரசுடன் தகவல்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டாம்: மம்தா பானர்ஜி
மத்திய அரசுடன் தகவல்களைப் பரிமாறிக் கொள்வதை நிறுத்திக் கொள்ளுமாறு மேற்கு வங்க அரசு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மம்தா பானர்ஜி உத்தரவு...
மத்திய அரசுடன் தகவல்களைப் பரிமாறிக் கொள்வதை நிறுத்திக் கொள்ளுமாறு மேற்கு வங்க அரசு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மம்தா பானர்ஜி உத்தரவு...
தெற்கு 24 பர்கானா மாவட்டத்தில் (South 24 Paragana district) நடைபெற்ற அரசு அதிகாரிகள் கூட்டத்தில், அவர் பங்கேற்று உரையாற்றினார். அப்போது, மேற்கு வங்க மாநில அரசுத்துறைகள் தங்களுக்கென தகவல் தொகுப்புகளை பராமரித்து வருவதாக மம்தா பானர்ஜி பெருமையுடன் குறிப்பிட்டார்.
இந்த தகவல்களையும், புள்ளிவிவரங்களையும் அரசுத்துறை அதிகாரிகள் மத்திய அரசுக்கு வழங்க கூடாது என்று மம்தா பானர்ஜி கண்டிப்புடன் கூறினார். மத்திய அரசிடமிருந்தும் எந்த புள்ளிவிவரங்களைப் பெற வேண்டாம் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
மேலும், மத்திய அரசு அனைத்து மாநிலங்களையும் கட்டுப்படுத்த முயல்வதாகவும், மாநில அரசுகளின் புள்ளிவிவரங்களை அரசியல் காரணங்களுக்காக பயன்படுத்தி வருவதாகவும் மம்தா பானர்ஜி கூறினார்.