J&K-ல் உயிரிழந்த WB தொழிலாளர்களின் குடும்பத்திற்கு உதவி: மம்தா பானர்ஜி!
காஷ்மீரில் உயிரிழந்த 5 WB தொழிலாளர்களின் குடும்பத்திற்கு அனைத்து உதவியும் வழங்கப்பட்டு என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்..!
காஷ்மீரில் உயிரிழந்த 5 WB தொழிலாளர்களின் குடும்பத்திற்கு அனைத்து உதவியும் வழங்கப்பட்டு என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்..!
ஜம்மு-காஷ்மீரின் குல்காமில் செவ்வாய்க்கிழமை ஐந்து முர்ஷிதாபாத் தொழிலாளர்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அதிர்ச்சியையும் வருத்தத்தையும் தெரிவித்துள்ளார். உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
"காஷ்மீரில் நடந்த கொடூரமான கொலைகள் குறித்து நாங்கள் அதிர்ச்சியும் ஆழ்ந்த வருத்தமும் அடைகிறோம். அதில், முர்ஷிதாபாத்தைச் சேர்ந்த ஐந்து தொழிலாளர்கள் உயிர் இழந்தனர். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துயரமான சூழ்நிலையில் உள்ள குடும்பங்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும்," என மேற்கு வாங்க முதல்வர் மம்தா தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கொல்லப்பட்ட ஐந்து தொழிலாளர்கள் காஷ்மீரில் தினசரி கூலி வேலை செய்து வருபவர்கள். அவர்கள் தவிர, மேலும் ஒரு தொழிலாளி தாக்குதலில் காயமடைந்தார். சம்பவத்தில், "அடையாளம் தெரியாத பயங்கரவாதிகள் ஐந்து தொழிலாளர்களை சுட்டுக் கொன்றனர் மற்றும் ஒருவர் காயமடைந்தார். காயமடைந்தவர் சிகிச்சைக்காக அனந்த்நாக் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொழிலாளர்கள் அனைவரும் மேற்கு வங்காளத்தின் முர்ஷிதாபாத்தைச் சேர்ந்தவர்கள்" என்று CRPF தாக்குதலுக்குப் பின்னர் தெரிவித்துள்ளது.
இப்பகுதி பாதுகாப்பு படையினரால் சுற்றி வளைக்கப்பட்டு, பாரிய தேடுதல் நடவடிக்கை தொடங்கப்பட்டது. கூடுதல் பாதுகாப்பு படையினரும் வரவழைக்கப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் 5 பேர் ஷேக் கம்ருதீன், ஷேக் எம் ரபீக், ஷேக் முர்ன்சுலின், ஷேக் நிஜாம் உத் தின் மற்றும் மொஹமட் ரபீக் ஷேக் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். காயமடைந்த தொழிலாளிக்கு ஜாகூர் உத் தின் என்று பெயர். இது காஷ்மீரில் ஒரு வாரத்தில் பயங்கரவாதிகள் நடத்திய நான்காவது தாக்குதல் ஆகும்.