மீண்டும் மேற்கு வங்க முதல்வராக இன்று பதவியேற்கிறார் மம்தா பானர்ஜி
மேற்கு வங்கத்தில் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்துள்ளது. மொத்த 292 தொகுதிகளில் 213 தொகுதிகளில் கட்சி வெற்றி பெற்றது. பாஜக 77 தொகுதிகளைப் பெற்றுள்ளது.
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்ற பின்னர் இன்று மம்தா பானர்ஜி மேற்கு வங்க முதல்வராக மீண்டும் பதவி எற்கிறார். கொரோனா தொற்று காரணமாக இந்த பதவி எற்பு விழா ராஜ் பவனில் எளிமையாக நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 10.45 மணியளவில் மம்தா பானர்ஜி (Mamata Banerjee) பதவியேற்க உள்ளார். கொரோனா பரவல் காரணமாக இந்த விழாவில் பங்கேற்க மிகச்சிலரே அழைக்கப்படுவார்கள் என ஆளுநர் ஜகதீப் தங்கர் கூறினார்.
மேற்கு வங்கத்தில் முன்னர் முதல்வராக இருந்த புத்ததேப் பட்டாச்சார்ஜி, எதிர்க்கட்சித் தலைவர் அப்துல் மன்னன் மற்றும் சிபிஐ (எம்) மூத்த தலைவர் பிமான் போஸ் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஒரு அதிகாரி தெரிவித்தார்.
நாட்டின் தற்போதைய COVID-19 நிலைமையை மனதில் கொண்டு மற்ற மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் பிற அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இந்த நிகழ்ச்சிக்கு அழைக்கப்படவில்லை என்று அந்த அதிகாரி பி.டி.ஐ இடம் தெரிவித்தார்.
ALSO READ: மம்தா தோல்வியால் ஆத்திரம்; BJP அலுவலகத்தை கொளுத்திய TMC தொண்டர்கள்
"COVID-19 தொற்றுநோய் காரணமாக மம்தா பானர்ஜியின் பதவியேற்பு நிகழ்ச்சியை மிகவும் எளிமையாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மம்தா பானர்ஜி மட்டும் முதல்வராக பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்படுவார். " என்று அந்த அதிகாரி கூறியதாக பி.டி.ஐ. அறிக்கை கூறியுள்ளது. பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலியும் விழாவுக்கு அழைக்கப்பட்டுள்ளதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.
திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் பானர்ஜி, தேர்தல் செயலுத்தி ஆய்வாளர் பிரஷாந்த் கிஷோர், கட்சித் தலைவர் ஃபிராத் ஹகிம் ஆகியோர் ராஜ் பவனில் சுமார் 10:45 மணியளவில் நடக்கவுள்ள நிகழ்வில் கலந்துகொள்வார்கள் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேற்கு வங்கத்தில் (West Bengal) தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்துள்ளது. மொத்த 292 தொகுதிகளில் 213 தொகுதிகளில் கட்சி வெற்றி பெற்றது. பாஜக 77 தொகுதிகளைப் பெற்றுள்ளது.
மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்ற ஒரு நாள் கழித்து, பல வன்முறை சம்பவங்கள் நடந்தன. இவற்றில் பல பாஜக தொண்டர்கள் இறந்தனர், பலர் காயமடைந்தனர்.
முன்னதாக திங்களன்று, உள்துறை அமைச்சகம் தேர்தலுக்கு பிந்தைய வன்முறை குறித்து மாநில அரசிடம் அறிக்கை கோரியுள்ளது
தேசிய மனித உரிமைகள் ஆணையம் (என்.எச்.ஆர்.சி) செவ்வாயன்று மேற்கு வங்கத்தில் வாக்கெடுப்புக்குப் பிந்தைய வன்முறைகள் குறித்து விசாரணை செய்து உண்மை கண்டறியும் குழுவுக்கு ஸ்பாட் விசாரணையை நடத்தி இரண்டு வாரங்களுக்குள் ஒரு அறிக்கையை விரைவாக சமர்ப்பிக்க உத்தரவிட்டது.
ALSO READ: மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு பின்னடைவு- மீண்டும் ஆட்சியை தக்கவைக்கிறார் மம்தா பானர்ஜி
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR