புதுடில்லி: வெற்றி பெற்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு ட்விட்டர் மூலம் வாழ்த்துக்களைக் கூறிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு "ஜெய் ஸ்ரீராம்" - "ஜெய் ஸ்ரீராம்" எனக்கூறி கலாய்த்து வரும் மேற்கு வங்க பாஜகவினர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நேற்று நடைபெற்ற உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற இந்திய அணிக்கு பல தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். அந்த வகையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்திய வீரர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!! #MainInBlue #TeamIndia" எனக் கூறியுள்ளார்.


அந்த கருத்து பதில் அளித்து வரும் பாஜகவினர் "ஜெய் ஸ்ரீராம்" - "ஜெய் ஸ்ரீராம்" எனக்கூறி தங்கள் கமண்ட்ஸ் பதிவு செய்து வருகின்றனர் குறிப்பிடத்தக்கது.


முன்னதாக கடந்த மே 31 அன்று, போராட்டத்தில் பங்கேற்க சென்ற வழியில் தம்மை நோக்கி "ஜெய் ஸ்ரீராம்" என முழக்கமிட்டவர்களுடன் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெருவில் இறங்கி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து பாஜக கட்சியினர் திரிணாமுல் கட்சித் தலைவர்களில் வீடுகள் அமைத்துள்ள தெருக்களில் "ஜெய் ஸ்ரீராம்" என்ற கோஷத்துடன் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் வன்முறையாக மாறக்கூடாது என நினைத்த போலீசார், அவர்கள் மீது தடியடி நடத்தி போராட்டத்தை கலைத்தனர்.


இதன் தொடர்ச்சியாக, அடுத்து "ஜெய் ஸ்ரீராம்" என எழுதப்பட்ட 10 லட்சம் கடிதங்களை மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜிக்கு அனுப்ப மேற்கு வங்க மாநில பாஜக முடிவு செய்தது எனபது குறிப்பிடத்தக்கது. 


இதுக்குறித்து தனது முகநூலில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, "மதத்தை பயன்படுத்தி அரசியல் ஆதாயம் அடைய பாஜக முயல்வதாகவும், அதற்காக பொய்யான தகவல்களை பரப்பி மக்களிடையே வெறுப்புணர்வை வளர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் மம்தா பானர்ஜி குறிப்பிட்டிருந்தார்.