உலகெங்கிலும் உள்ள போதைப்பொருள் கடத்தல்காரர்களும் தங்கக் கடத்தல்காரர்களும் (Gold Smugglers) சட்டவிரோதமாக இவற்றை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கடத்த வினோதமான வழிகளைப் பின்பற்றுவதைப் பற்றி அவ்வப்போது நாம் கேள்விப்படுகிறோம். இப்போது COVID-19 காலத்தில், ஒரு மனிதர் தன் முகக்கவசம் (Face Mask), தங்கத்தை மறைக்க ஒரு அருமையான இடமாக இருக்கும் என்று நினைத்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

COVID-19 காரணமாக போடப்பட்டுள்ள புதிய விமான பயண வழிகாட்டுதல்களைப் பயன்படுத்தி, ஒரு நபர் தனது (KN-95) முகக்கவசத்தின் வெளியேற்ற வால்வுக்குப் பின்னால் 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சுமார் 40 கிராம் தங்கத்தை மறைத்து வைத்திருந்ததாக அறியப்படுகிறது.


கர்நாடகாவைச் சேர்ந்த அம்மர் என்ற நபர் செவ்வாய்க்கிழமை மாலை துபாயிலிருந்து ஒரு விமானத்தில் வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், காலிகட் (Calicut) சர்வதேச விமான நிலையத்தின் சுங்க அதிகாரிகள் அவரது கடத்தல் முயற்சியை முறியடித்ததால், அவரது திட்டம் வெற்றிபெறவில்லை. அவர் பின்னர் கைது செய்யப்பட்டார்.


ALSO READ: Pressure Cooker-ல் தங்கம்: Viral ஆகும் கேரளாவின் தங்கக் கடத்தல் படங்கள்!!


"இதுபோன்ற மறைத்து வைக்கும் தந்திரங்களை நாங்கள் பார்ப்பது இதுவே முதல் முறையாகும். மேலும் COVID-19 நெருக்கடியால் வழங்கப்பட்ட ஒவ்வொரு சாத்தியத்தையும் கடத்தல்காரர்கள் பயன்படுத்த முயற்சிக்கிறார்கள் என்பதை இது காட்டுகிறது" என்று விமான நிலைய சுங்க அதிகாரி ஒருவர் கூறினார்.


இதுபோன்ற வழக்குகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. சில நாட்களுக்கு முன்னர், சவூதி அரேபியாவின் ஜெட்டாவிலிருந்து வந்த ஒரு பயணி 12 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 250 கிராம் தங்கத்தை அயர்ண் பாக்சில் மறைத்து வைத்திருந்தார்.


ALSO READ: கேரள தங்கக் கடத்தல் வழக்கு: சிவசங்கரிடம் 10 மணி நேரமாக நடைபெற்ற விசாரணை முடிந்தது


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR