முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டுக்கு திங்கள்கிழமை தொட்டக்களுடன் வந்த ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டுக்கு திங்கள்கிழமை தொட்டக்களுடன் வந்த ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடந்த நவம்பர் 20 ஆம் தேதி அரவிந்த் கெஜ்ரிவால் தலைமை செயலகஅலுவலகத்திற்கு வெளியில் ஒருவர் அவர் மீது மிளகாய் தூள் தாக்குதலை அடுத்து தற்போது இந்த சம்பவம் நடந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


தன்னை க்ளார்க் என்று சொல்லிக் கொண்ட இம்ரான் என்ற நபர், நேற்று முதல்வரைப் பார்க்க அவரது இல்லத்துக்கு வந்துள்ளார். தனக்கு கொடுக்கப்படும் சம்பளம் போதவில்லை என்றும், முதல்வரிடம் சம்பள உயர்வு குறித்து பேச வேண்டும் என்றும் அவர் தெரிவித்ததாகவும் வஜ்ஃப் வாரியத்தின் சம்பளத்தில் அதிகரிப்பு பற்றி கலந்துரையாடுவதற்கு நியமிக்கப்பட்ட 10 முதல் 12 முஸ்லீம் மதகுருமார்களுடன் சேர்ந்து கெஜ்ரிவால் சந்திக்கத் திட்டமிட்டிருந்தார்.


இதையடுத்து முதல்வர் வீட்டிலிருந்த பாதுகாப்பு அதிகாரிகள், இம்ரானை சோதனையிட்டுள்ளனர். அப்போது, அவரிடம் தோட்டாக்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இதனால், அவர் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறார். தோட்டாக்கள் குறித்து இம்ரான் கூறுகையில், அருகிலிருக்கும் மசூதியில் தோட்டாக்களை கண்டடைந்தாகவும், தன்னிடம் அது இருப்பதை மறந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார். 


இதை தொடர்ந்து அவர், மனிதன் ஆயுத சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விசாரணை செய்து வருகின்றனர். இதற்க்கு முன்னதாக, கடந்த வாரம், 40 வயதான அனில் சர்மா, கடந்த வியாழக்கிழமை, கெஜ்ரிவால் மீது மிளகாய் பொடி வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. அவரது அலுவலகத்துக்கு வெளியிலேயே இந்தத் தாக்குதல் நடந்தது. இதனால் முதல்வரின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுந்தது. மேலும் அவர், ‘டெல்லியின் முதல்வருக்குக் கூட பாதுகாப்பு கொடுக்க முடியவில்லை என்றால், பிரதமர் நரேந்திர மோடி பதவி விலக வேண்டும்' என்றார்.