டோல்கேட் பெண் ஊழியரை அடித்த நபர்; செருப்பை கழற்றி திருப்பி கொடுத்த பெண்
மத்திய பிரதேசத்தில் டோல்கேட்டில் தன்னை தாக்கிய நபரை, பெண் ஊழியர் செருப்பைக் கழற்றி அடித்த வீடியோ வெளியாகியுள்ளது,.
நாடு முழுவதும் டோல்கேட்டுக்கு எதிராக மக்கள் பலமுறை போராட்டங்கள் நடத்தியுள்ளனர். தமிழகத்திலும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட கட்சிகள் தொடர்ச்சியாக டோல்கேட்டுகளை அகற்றக்கோரி போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். மகாராஷ்டிராவில் பலமுறை டோல்கேட் நீக்கக்கோரி போராட்டங்கள் வெடித்துள்ளன. இதற்கு முக்கிய காரணம் நெடுஞ்சாலைகளில் இருக்கும் அதிக டோல்கேட் மற்றும் கட்டணங்கள். இவற்றை குறைக்கக்கோரியும், நீக்கக்கோரியும் பெரும்பாலான அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இருப்பினும் மத்திய அரசு டோல்கேட் கட்டணங்களை வசூலிப்பதில் மட்டுமே புதிய புதிய யுக்திகளை புகுத்தி வருகிறது.
மேலும் படிக்க | இமாச்சலப் பிரதேசத்தில் பெய்துவரும் கனமழையின் எதிரொலி 22 பேர் பலி
இதனால் கடுப்பாகும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவ்வப்போது டோல்கேட் ஊழியர்களிடம் தகராறில் ஈடுபடுவதும் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவருகிறது. இப்படியான சூழலில் மத்திய பிரதேசத்தில் டோல்கேட்டில் பெண் ஊழியரை, நபர் ஒருவர் தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எதற்காக இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது என்ற தகவல் வெளியாகவில்லை. அந்த வீடியோவில் டோல்கேட் பெண் ஊழியரிடம் வேகமாக வந்து வாக்குவாதத்தில் ஈடுபடும் திடீரென பெண்ணை தாக்குகிறார். எதிர்பார்க்காத பெண், தானும் உடனடியாக சுதாரித்துக் கொண்டு அவரை திருப்பித் தாக்குகிறார்.
காலில் அணிந்திருந்த செருப்பைக் கழற்றி தன்னை அடித்த நபரை தாக்குகிறார். சமூக ஊடகங்களில் இந்த வீடியோ வெளியாகியுள்ளது. பலரும் பெண்ணை தாக்கிய நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இன்னும் சிலர், அங்கு நடந்த சம்பவத்தை முறையாக விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும் என தெரிவித்துள்ளனர். டோல்கேட் பெண் ஊழியரை ஆண் ஒருவர் தாக்கும் இந்த வீடியோ இப்போது சமூக ஊடகங்களில் வைரலாகியிருக்கிறது.
மேலும் படிக்க | மணீஷ் சிசோடியாவுக்கு எதிராக லுக் அவுட்நோட்டீஸ்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ