உஷார் மக்களே.! போலி வெப்சைட் - EB பில் கட்டி ஏமாற வேண்டாம்
மகாராஷ்டிராவில் போலி வெப்சைட் தொடங்கி மின்கட்டணம் வசூலித்த ஆசாமிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ஆன்லைன் செயலிகள் மூலம் மின்கட்டணம் செலுத்தும் முறை அனைத்து மாநிலங்களிலும் அமல்படுத்தப்பட்டுள்ளது. கூகுள் பே, பேடிஎம் உள்ளிட்ட செயலிகள் வழியாக வீட்டில் இருந்தபடியே மின்கட்டணங்களை செலுத்த முடியும். இதனை வைத்து முறைகேடு ஒன்றை அரங்கேற்றிள்ளது ஜார்க்கண்டைச் சேர்ந்த கும்பல்.
ALSO READ | முகேஷ் அம்பானி வாங்கியிருக்கும் சொகுசு கார்..! விலை எவ்வளவு தெரியுமா?
மகாராஷ்டிரா மாநில மின்சார விநியோ நிறுவன லிமிட்டெட் தளத்தைப்போல் போலி வெப்சைட் ஒன்றை உருவாக்கிய அந்த கும்பல், வாடிக்கையாளர்களின் தொலைபேசிக்கு, மோசடியாக உருவாக்கிய வெப்சைட்டில் இருந்து மின் கட்டணம் செலுத்துமாறு மெசேஜ் அனுப்பியுள்ளனர். எச்சரிக்கை மெசேஜ் என அவர்கள் அனுப்பியதால், உண்மையென நம்பிய பலர் அந்த வெப்சைட் மூலம் பணத்தை செலுத்தியுள்ளனர். மொத்தமாக 65,648 ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது.
பின்னர் இது போலி என்பதை அறிந்து கொண்ட பலர், மகாராஷ்டிரா காவல்துறையிடம் புகார் அளித்தனர். பல்வேறு பகுதிகளிலும் இருந்தும் புகார்கள் குவிந்ததால், சைபர் கிரைம் காவல்துறையினர் தீவிர விசாரணையில் இறங்கினர். அதில், ஜார்க்கண்டைச் சேர்ந்த கும்பல் இந்த மோசடியை அரங்கேற்றியது தெரியவந்தது. இதனையடுத்து அங்கு சென்ற காவல்துறையினர், மோசடியில் ஈடுபட்ட ஒருவரை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மகாராஷ்டிரா பகுதியில் இருக்கும் மொபைல் எண்களை முறைகேடாக பெற்று, தங்கள் வெப்சைட் மூலம் மோசடியை அரங்கேற்றியதாக தெரிவித்துள்ளார். தலைமறைவாக இருக்கும் இன்னும் சிலரை தேடி காவல்துறையினர் வருகின்றனர்.
ALSO READ | மும்பையில் முடங்கிய ஜியோ நெட்வொர்க்..! வாடிக்கையாளர்கள் அவதி
இதுபோன்ற போலி மெசேஜ்ஜூகளை நம்ப வேண்டாம், வெப்சைட்டின் உண்மை தன்மையை ஆராய்ந்து அதன்பிறகு ஆன்லைன் மூலம் பணம் செலுத்த வேண்டும் என மகாராஷ்டிரா காவல்துறை பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. அதிகரித்து வரும் சைபர் குற்றங்கள் குறித்து மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR