பீகாரைச் சேர்ந்த 40 வயதான நீலம் தேவி என்ற பெண்ணும் டெல்லியைச் சேர்ந்த ஷ்ரத்தா வாக்கரை போலவே கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். பீகாரின் பாகல்பூர் கிராமத்தைச் சேர்ந்த ஷகீல் என்பவர் தனது கூட்டாளியுடன் சேர்ந்து அந்த நீலம் தேவியின் கை, காது மற்றும் மார்பகங்களை வெட்டி கொடூரமாக தாக்கியுள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பொதுமக்களின் முன்னிலையில் இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. கொலையாளி அந்த பெண்ணின் காலையும் வெட்ட முயன்றுள்ளார், ஆனால் யாரோ வரும் சத்தம் கேட்டு அவர்கள் இருவரும் அங்கிருந்து ஓடிவிட்டனர். அந்த பெண் பலத்த காயங்களுடன் மாயாகஞ்சில் உள்ள ஜவஹர்லால் நேரு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதிக ரத்தப்போக்குதான் மரணத்திற்கு காரணம் என மருத்துவர்கள் தெரிவித்தனர். எனினும், அந்த பெண் இறப்பதற்கு சிறிதுநேரத்திற்கு முன் தன்னை தாக்கியவரின் பெயரை போலீசாரிடம் கூறியதாக கூறப்படுகிறது.


அனைவரின் முன்னிலையிலும்...


மக்கள் கூட்டம் நிறைந்த சந்தையில், அந்த இளைஞர் அனைவர் முன்னிலையிலும் அந்த பெண்ணை கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளார். கூரிய ஆயுதத்தத பெண்ணின் மார்பகம் வெட்டப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை (டிச. 3) பீகார் மாநிலம் பாகல்பூரில் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


அந்த பெண் திருமணமானாவர் என்றும், அவர் அடிக்கடி அந்த சந்தைக்கு வருபவர் என்றும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, அந்த பெண் சனிக்கிழமைகளில் தொடர்ச்சியாக வீட்டிற்கு தேவைப்படும் அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்காக சந்தைக்கு சென்றுள்ளார். அதேபோன்றுதான், கடந்த சனிக்கிழமையும் சந்தைக்கு சென்றுள்ளார். 


மேலும் படிக்க | ஜாதி பேரணிகளை ஏன் நிரந்திரமாக தடை செய்யக்கூடாது... உயர்நீதிமன்றம் எழுப்பிய கேள்வி!


கொலையாளி ஷகீல் சிறிய கண்டெய்னரில் ஆயுதங்களை மற்றும் அவரது தம்பி ஷேக் ஜூடின், இருவரும் சேர்ந்து இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர். ஷகீல் முதலில், அந்த பெண்ணின் தலையில் ஆயுதத்தால் ஓங்கி அடித்துள்ளார். அதில், அந்த பெண் சரிந்து கீழே சரிந்துள்ளார். சம்பவ இடத்தில் இருந்து பெண்ணை மீட்டு உடற்கூராய்வுக்கு பின், உடலை குடும்பத்தாரிடம் போலீசார் ஒப்படைத்தனர். தொடர்ந்து, போலீசார் கொலையாளிகள் இருவரையும் கைது செய்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். 


சிக்கன் வெட்டும் கத்தியால்...


இதுகுறித்து போலீசார் தெரிவிக்கையில்,"நெரிசல் மிகுந்த சந்தையில் அனைவர் முன்னிலையிலும் நீலம் தேவியை ஷகீல் தாக்கினார். அந்த பெண்ணை கூரிய ஆயுதத்தால் தாக்க ஆரம்பித்துள்ளான். அவன் பெண்ணின் மார்பை வெட்டியுள்ளான். அதன் பிறகு, அவரது இரண்டு கைகள், இரண்டு கால்கள் மற்றும் இரண்டு காதுகளும் துண்டிக்கப்பட்டுள்ளன. அலறல் சத்தம் கேட்டு, அந்த வழியாக சென்ற ஒருவர், அவரது கணவர் அசோக் யாதவுக்கு போன் செய்து, நடந்த சம்பவம் குறித்து தெரிவித்துள்ளார்" என்றனர்.


கொலைக்கு பயன்படுத்திய ஆயுதத்தை போலீசார் கைப்பற்றினர். கொலையாளி சிக்கன் வெட்டும் கத்தியால், பெண்ணின் உறுப்புகளை வெட்டியுள்ளார். இது தவிர, குற்றவாளியின் வீட்டில் இருந்து மேலும் பல ஆயுதங்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.


கொலைக்கான காரணம்


நீலம் தேவியின் கணவர் அசோக் யாதவ் மளிகை கடை நடத்தி வருகிறார். அவரது மனைவி நீலமும் கடையை கவனித்து வந்துள்ளார். இவரது கடைக்கு முகமது ஷகீல் அடிக்கடி வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார். பண பிரச்னை தொடர்பாகவே இருவருக்குள்ளும் தகராறு ஏற்பட்டதாக போலீசார் தெரிவிக்கின்றனர். 


இதன் காரணமாகவே இந்த கொலை சம்பவம் நடந்துள்ளது. போலீசார் கூறுகையில்,"உயிரிழந்த பெண், கொலையாளியிடம் கடன் வாங்கியது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒரு மாதத்திற்கு பின்னரும் பணத்தை திருப்பி கொடுப்பதில் அவர்களிடம் இடையே தகராறு ஏற்பட்டது. எனவே, ஷாகீல் அந்த பெண்ணை கொலைசெய்துள்ளார்" என்றனர். 


கொலையாளிக்கும், தங்களின் குடும்பத்தினருக்கும் எவ்வித பகையும் இல்லை என உயிரிழந்த நீலம் தேவியின் கணவர் தெரிவித்துள்ளார். இதை தொடர்பான விசாரணை தொடர்ந்து வரும் நிலையில், அந்த பகுதி மிகவும் பரபரப்புடன் காணப்படுகிறது. 


மேலும் படிக்க | டெல்லி ஷ்ரத்தா கொலை இன்ஸ்பிரேஷன்... அதே ஸ்டைலில் காதலி கொலை.. சிக்கியது எப்படி?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ