குடும்ப தகராற்றில் மாமியாரின் மொபைல் எண்ணை ஆபாச தளத்தில் பதிவேற்றம் செய்த மருமகன் கைது!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆந்திர பிரதேசம் மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள NTPC நிறுவனத்தில் உதவி மேலாளராக பணியாற்றும் 33 வயதுடைய சுனில் என்பவரை, சைபர் கிரைம் காவல்துறையினர் மாமியாரின் மொபைல் எண்ணை, ஆபாச தளத்தில் பதிவேற்றம் செய்ததாக கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் அவர் கைது செய்யபட்டார். இவருக்கு கடந்த  2017 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. இதையடுத்து, மனைவி மற்றும் மாமியாருடன் அவருக்கு குடும்ப விவகாரங்களில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.


மேலும், தனக்கு போதிய மரியாதை தரவில்லை என்று ஆத்திரமடைந்த அவர், மாமியாரின் மொபைல் எண்ணை ஆபாச தளம் ஒன்றில் பதிவிட்டுள்ளார். இதையடுத்து, கைதான நபரின் 59 வயது மாமியாருக்கு அடிக்கடி அழைப்புகள் வந்துள்ளது. அதுமட்டும் இன்றி ஆய்வரும் தொலைபேசியில் ஆபாசமாக பேசியுள்ளனர். இதனால், அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண், சைபர் கிரைம் போலீசில் புகார் தெரிவிவ்த்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார், பெண்ணின் மருமகன் தான் ஆபாச தளத்தில் மொபைல் எண்ணை பதிவு செய்துள்ளார் என்பதை கண்டறிந்தனர்.


இதனை அடுத்து, அவரை கைது செய்து மூன்று பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.