உத்தரபிரதேச மாநிலம் ராம்பூர் மாவட்டத்தில் இருந்து ஒரு அதிர்ச்சியான வழக்கு வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இங்குள்ள ஒரு கிராமத்தில், டிவி சீரியல் பார்க்கும் தன் மனைவியை, டிவி பார்க்கக் கூடாது என்று கணவர் தடை விதித்தார். இதனால் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இவ்வாறான நிலையில் மனைவி துப்பாக்கியினால் சுடப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தை செய்து விட்டு கணவர் தலைமறைவானார். பாதிக்கப்பட்ட அந்த பெண் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதிர்ச்சி தரும் இந்த சம்பவம்  ராம்பூரின் ஸ்வார் காவல் நிலையப் பகுதிக்கு உட்பட்ட சமோடியா கிராமத்தில் நடந்தௌள்ளது. இங்கு ஷியாம்லாலின் மனைவி வீட்டில் டிவி சீரியல் பார்த்துக் கொண்டிருந்தார். இதற்கிடையில், ஷியாம்லால் குடிபோதையில் வீட்டிற்கு வந்தார். மனைவி டிவி சீரியல் பார்க்கக் கூடாது என்று தடை விதித்தார். இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் இந்த வாக்குவாதம் சண்டையாக மாறியது.


மேலும் படிக்க | காதலியை கொன்று துண்டுகளாக்கி சுவற்றில் புதைத்த கொடூரம்! மனம் பதற வைக்கும் கொலை!


டிவி சீரியலால் மனைவியை துப்பாக்கியால் சுட்ட கணவர்


டிவி சீரியல் விவகாரத்தில் இருவருக்கும் இடையே நடந்த சண்டை தீவிர மடைந்தது. இதற்கிடையில், ஷியாம்லால் உரிமம் பெற்ற துப்பாக்கியை வெளியே கொண்டு வந்தார். அவர் தனது மனைவி நோக்கி வேகமாக ஓடினார். பின்னர் அவலை நோக்கி துப்பாக்கியினால் சுட்டார் இந்நிலையில் அந்த பெண்ணின் நிலை கவலைக்கிடமானது. அதேசமயம், ஷியாம்லால் அங்கிருந்து தப்பியோடினார். இந்த சமப்வம் பற்றிய தகவல் கிடைத்ததும் உறவினர்கள் விரைந்து வந்து பெண்ணை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் முதலுதவி சிகிச்சைக்கு பின்  வேறு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த பெண்ணின் வலது கையில் தோட்டா தாக்கியதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.


பெண்ணின் கணவர் மீது போலீசார் வழக்குப்பதிவு 


இந்நிலையில், அந்த பெண்ணின் மகன் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் ஸ்வார் காவல் நிலையத்தில் 307 பிரிவின் கீழ் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த விஷயத்தை தீவிரமாக எடுத்துக்கொண்ட போலீசார் குற்றவாளிகளிடம் விசாரணையை தொடங்கினர். சம்பவம் நடந்த சிறிது நேரத்தில் போலீசார் குற்றவாளியை கைது செய்தனர். இந்த விவகாரம் தொடர்பாக, ஷியாம் லால் கைது செய்யப்பட்டதாக கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சன்சார் சிங் தெரிவித்துள்ளார். துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது. அவர் சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளார். எனினும் பெண் தற்போது அபாய கட்டத்தை தாண்டிவிட்டார் என கூறப்படுகிறது. அவரது மகன் எப்ஐஆர் பதிவு செய்துள்ளார்.


இன்றைய சமுதாயம் குடி பழக்கத்திற்கு அடிமையாகி, சகிப்புத் தன்மை ஏதும் இன்றி, மனைவி, குழந்தைகள் என்றும் கூட பாராமல், கொடூரமாக தாக்குவதும், சில சமயங்களில் கொலை செய்வதும் அடிக்கடி நடக்கின்ரன. இது போன்ற செய்திகள் நாள்தோறு செய்திகளில் இடம்பெறுவது மிகவும் கவலைக்குரிய விஷயம் என்றால் மிகையில்லை.


மேலும் படிக்க | அமெரிக்க முன்னாள் அதிபர் மீதான வழக்கு! நம்பிக்கையை இழப்பீர்கள்: எச்சரிக்கும் மஸ்க்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ