டெல்லியில் திறந்த வாகனத்தில் பரப்புரை செய்தபோது முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை, கூட்டத்தில் இருந்த ஒருவர் பாய்ந்து வந்து கன்னத்தில் அறைந்தார்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியா முழுவதுமான மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இந்நிலையில், தேர்தலுக்கான பிரட்சரங்கள் நாடுமுழுவதும் சூடுபிடித்து வருகின்றநிலையில், ஐந்தாம் கட்ட தேர்தல் நடைபெறும்  7 மாநிலங்களில் உள்ள 51 மக்களவை தொகுதிகளில் இன்றுடன் பிரசாரம் நிறைவு பெற்றது. 


இந்நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லியில் உள்ள 7 மக்களவை தொகுதி தேர்தலில் போட்டியிடும் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரம் மேற்கொண்டுள்ளார். இன்று திறந்த வாகனத்தில் சென்று வாக்கு சேகரித்தார். பிரசாரத்தில் ஈடுபட்டதால் வாகனம் மெதுவாக சென்று கொண்டிருந்தது. அப்போது கூட்டத்தில் இருந்த ஒருவர் திடீரென அரவிந்த் கெஜ்ரிவாலின் கன்னத்தில் அடித்தார்.


திடீரென தாக்கப்பட்டதால் கெஜ்ரிவால் நிலை குலைந்த நிலையில் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே தாக்கப்பட்டவரை ஆம்ஆத்மி கட்சியினர் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.