டிக்டோக்கில் தான் தற்கொலை செய்யபோவதாக வீடியோவை பதிவேற்றிய இளைஞர்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டெல்லியின் ஹரி நகர் பகுதியில் உள்ள ஹோட்டலின் கூரையில் இருந்து ஒருவர் தற்கொலை செய்து கொள்ள போவதாக மிரட்டியுள்ளார். சந்தீப் என்ற அர்மான் மாலிக் ஒரு ஹோட்டல் கட்டிடத்தின் கூரை மீது ஏறி தற்கொலை செய்து கொள்வதாக அச்சுறுத்திய வீடியோவை அவரது டிக்டோக்கில் வெளியிட்டுள்ளார். 


இந்த வீடியோ வைரலாகியுள்ளது. இந்த வீடியோவைப் பதிவேற்றிய சில மணி நேரங்களிலேயே, அர்மான் மாலிக் பின்தொடர்பவர்கள் கணிசமாக அதிகரித்துள்ளனர். அர்மான் டிக்டோக்கில் மிகவும் பிரபலமானவர், அவர் சுமார் 50 லட்சம் பின்தொடர்பவர்களைக் கொண்டிருக்கிறார். இது போன்ற தற்கொலை அச்சுறுத்தல்களின் மூன்று வீடியோக்களை அவர் பதிவேற்றியுள்ளார்.


ஒரு வீடியோவில், "என் மனைவி பயலும் அவரது குடும்ப உறுப்பினர்களும் சேர்ந்து ஒரு கற்பழிப்பு வழக்கில் தன்னை குற்றம் சாடியதாக" அர்மான் கூறினார். மற்றொரு வீடியோவில், அர்மான் தனது வீட்டு வேலைக்காரி மற்றும் நீரஜ் என்ற ஒருவரைக் குறிப்பிடுகிறார். மூன்றாவது வீடியோவில், அர்மான் தனது டிக்டோக் கணக்கில் தற்கொலை அச்சுறுத்தல் கடிதத்தை பதிவேற்றியுள்ளார்.


அர்மான் தனது கடிதத்தில் இந்த நடவடிக்கைக்கு பின்னால் பயல் மற்றும் அவரது சகோதரிகளை குற்றம் சாட்டினார். பயல் அர்மானின் முதல் மனைவி, அவர் தற்கொலைக்கு முயன்ற அதே ஹோட்டலில் திருமணம் செய்து கொண்டார்.


இது குறித்து காவல்துறையினர் கூறுகையில்; அர்மான் தனது இரண்டாவது மனைவியுடன் அகமதாபாத்தில் இருந்து இந்த ஹோட்டலுக்கு வந்தார். திடீரென இருவருக்கும் இடையில் ஏதோ நடந்தது, அதைத் தொடர்ந்து அர்மான் கூரைக்குச் சென்றார்.


திங்கள்கிழமை காலை பல முயற்சிகளுக்குப் பிறகு, காவல்துறையும் தீயணைப்பு குழுவும் அர்மானை கூரையிலிருந்து கீழே கொண்டு வந்தன என காவலர்கள் தெரிவித்தனர்.