ராஜஸ்தானில் ரயில் முன் குதித்து இளம்ஜோடி தற்கொலை செய்து கொண்டதால் பரபரப்பு!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ராஜஸ்தானின் ஸ்ரீகங்கநகர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு ஆணும் பெண்ணும் ஓடும் ரயில் முன் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினர் திங்கள்கிழமை தெரிவித்தனர். அவர்களின் உடல்கள் திங்கள்கிழமை காலை சூரத்கர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பிபெரன் கிராமத்தில் ரயில் பாதையில் கண்டெடுக்கப்பட்டன. "அவர்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு ஓடும் ரயில் முன் பாய்ந்து தங்களின் உயிரை மாய்த்து கொண்டனர்" என காவல்துறையினர்  தெரிவித்துள்ளனர். 


இதை தொடர்ந்து "அவர்களின் அடையாளத்தை அறிய முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இருவரும் 24 வயதுடையவர்கள் என்று நம்பப்படுகிறது," என்று ஒரு போலீஸ் அதிகாரி கூறினார். 


சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக உள்ளூர் மருத்துவமனையின் சவக்கிடங்கிற்கு மாற்றப்பட்டுள்ளன என்று போலீசார் தெரிவித்தனர். மேலும், இவர்களின் மரணம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிந்த்ரானர்.  மேலும், இருவரும் காதலாகளாக இருக்க வாய்ப்பு இருப்பதாகவும், காதல் பிரச்சனையால் தற்கொலை செய்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகின்றனர்.