இந்தியாவில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான் 3 விண்கலம் நிலாவின் தென்துருவ பகுதியில் நேற்று தரையிரங்கியது. இந்த நிகழ்வை மக்கள் கொண்டாடி வருகின்றனர். இதை வைத்து ஒரு காண்டம் நிறுவனம் விளம்பரம் ஒன்றை தயாரித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காண்டம் நிறுவனம்..


இந்தியாவின் காண்டம் (ஆணுறை) நிறுவனங்களிலேயே மிகவும் பிரபலமானதாக விளங்குகிறது மேன் ஃபோர்ஸ் (Manforce condoms). இந்த நிறுவனம் 2007ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. விதவிதமான ஃப்ளேவர்களை உடைய ஆணுறைகளை முதன் முதலில் விற்க தொடங்கிய நிறுவனம் இதுதான். இந்த நிறுவனம், வைரலாக எந்த செய்தி கிடைத்தாலும் அதை வைத்து விளம்பரம் செய்வது வழக்கம். அந்த வகையில் நேற்று சந்திரயான் 3 விண்கலம் நிலாவில் பத்திரமாக தரையிரங்கியதை அடுத்து ஒரு விளம்பர போஸ்டரை வெளியிட்டுள்ளது. 


“சாஃப்ட் லேண்டிங்..”


சந்திரயான் 3 விண்கலம் நிலாவில் எந்த பாதிப்பும், எந்த இயந்திர கோளாறுகளும் இன்றி பத்திரமாக (Soft Landing)  தரையிரக்கப்பட்டுள்ளது. இதை வைத்து பலர் பல வகையில் மீம்ஸ்களை உருவாக்கி வருகின்றனர். மேன் ஃபோர்ஸ் காண்டம் நிறுவனமும் இதே போன்ற ஒரு முயற்சியை செய்துள்ளது. 



“குறிப்பிட்ட இடத்தில் மென்மையாக தரையிரங்கியதற்கு வாழ்த்துக்கள்” என்று மேன் ஃபோர்ஸ் நிறுவனம் தங்களது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது, மேலும், அவர்கல் வெளியிட்டுள்ள போஸ்டரில் "Land Softly, Land Wildly" என்ற வாசகத்தையும் அந்த நிறுவனம் இணைத்துள்ளது. இதை அந்த நிறுவனம் இரட்டை அர்த்தத்துடன் பதிவிட்டுள்ளது. 


மேலும் படிக்க | சந்திரயான்-3 குறித்து நீங்கள் கண்டிப்பாக அறிய வேண்டிய 5 தகவல்கள்...!


மக்கள் கொந்தளிப்பு..


சந்திரயான் 3 விண்கலத்தின் சாதனையை அகில இந்தியாவுமே நேற்று கொண்டாடி வந்தது. இந்த நிலையில், மேன் ஃபோர்ஸ் நிறுவனம் இவ்வாறான போஸ்டரை பதிவிட்டுள்ளதை ஒட்டி மக்கள் பலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது மிகவும் இழிவான செயல் எனவும் ஒரு சிலர் தங்களது டிவிட்டர் பக்கங்களில குறிப்பிட்டுள்ளனர். 


சாதனை படைத்த சந்திரயான்3:


சந்திரயான் 3 லேண்டிங்கை வைத்து சில நிறுவனங்கள் விளம்பரம் செய்திருந்தாலும் அந்த விண்கலம் நிகழ்த்தியுள்ள சாதனையையும் பலர் கொண்டாடி வருகின்றனர். நிலாவின் தென்துருவ பகுதியில் இதுவரை எந்த நாட்டின் விண்கலமும் சென்றதில்லை. தற்போது இந்தியாவின் சந்திரயான் 3 விண்கலம் நிலவின் தென்துருவ பகுதியில் தரையிரங்கி அந்த சாதனையை நிகழ்த்தியுள்ளது. நிலாவில் தனது விண்கலத்தை வெற்றிகரமாக தரையிறக்கிய 4வது நாடாக இந்தியா மாறியுள்ளது. தற்போது சந்திரயான் 3 விண்கலத்தில் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டர், நிலாவில் தனது ஆய்வு பணியை தொடங்கியுள்ளது. நேற்று இரவு நிலவின் முதல் புகைப்படத்தையும் சந்திரயான் 3 அனுப்பியது. 


மேலும் படிக்க | சந்திரயான்-3 பயணிகளுக்கு வாழ்த்துகள்... சீரியஸாக பேசிய அமைச்சர் - சிரிக்கும் நெட்டிசன்ஸ்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ