Manipur News In Tamil: வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் சட்டம் ஒழுங்கு மற்றும் அரசியலமைப்பு இயந்திரங்கள் முற்றிலும் சீர்குலைந்துவிட்டதாகக் கூறிய உச்ச நீதிமன்றம், ஆகஸ்ட் 7-ம் தேதி அடுத்த விசாரணைக்கு ஆஜராகுமாறு மாநில டிஜிபிக்கு  இன்று (ஆகஸ்ட் 1, செவ்வாய்க்கிழமை) உத்தரவிட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மணிப்பூரில் பெண்கள் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட வீடியோ வைரல் ஆனதை அடுத்து, தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து இந்திய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது. அதனுடன் பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள் தாக்கல் செய்த மனுக்கள் உட்பட மணிப்பூர் வன்முறை தொடர்பான பல மனுக்களையும் விசாரித்து வருகிறது. அந்தவகையில் இந்த வழக்குகள் இன்று இரண்டாவது நாளாக உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் பரிதிவாலா, மனோஜ் மிஸ்ரா அமத்வுக்கு முன் விசாரணைக்கு வந்தது.


இன்று நடந்த விசாரணையில், "சட்டம் ஒழுங்கு அமைப்புகளால் மக்களைப் பாதுகாக்க முடியாவிட்டால் குடிமக்களுக்கு என்ன நடக்கும்? என்று கேள்வி எழுப்பியதோடு, காவல் துறையினரால் நடத்தப்படும் விசாரணை "மந்தமாக இருப்பதாகவும்" பெண்களை கும்பலிடம் ஒப்படைத்த காவலர்கள் மீது மாநில காவல்துறையால் விசாரிக்கப்பட்டதா? என்றும் கேள்வி கேட்டது. 


மேலும் படிக்க - மணிப்பூருக்கு அத்தியாவசியப் பொருள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்


மேலும் "பெண்கள் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்ட வீடியோ வழக்கில் எஃப்ஐஆர் பதிவு செய்வதில் நீண்ட கால தாமதம் ஏற்பட்டது என்பது தெளிவாகத் தெரிகிறது என்று கூறிய உச்ச நீதிமன்றம், மாநில காவல்துறையினால் விசாரணை செய்ய முடியவில்லை என்பதையே காட்டுகிறது. எப்ஐஆர் பதிவு செய்ய முடியாத அளவுக்கு அரசு இயந்திரம் செயலிழந்து உள்ளது. இரண்டு மாதங்களுக்கு பிறகு எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு உள்ளது. எந்தவித கைது நடவடிக்கை இல்லை. நீண்ட நாட்குக்கு பிறகு தான் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளது என்று உச்ச நீதிமன்றம் கடுமையாக சாடியது. 


பாதிக்கப்பட்ட பெண்கள் தங்களை வன்முறை கும்பலிடம் காவல் அதிகாரிகள் தான் ஒப்படைத்தார்கள் என்று வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்கள். அந்த காவல் அதிகாரிகள் மீது மாநில காவல்துறையால் விசாரிக்கப்பட்டதா? அல்லது அந்த சம்பவம் குறித்து மாநில டிஜிபி விசாரணை மேற்கொண்டாரா? மணிப்பூர் டிஜிபி என்ன செய்து கொண்டிருக்கிறார்? எனக் கேள்விகள் எழுப்பிய இந்திய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், "வரும் ஆகஸ்ட் 7 ஆம் தேதி 2 மணிக்கு மணிப்பூர் டிஜிபி  நேரில் ஆஜராக வேண்டும் என உத்தவிட்டு, இந்த வழக்கையும் அன்றைய தினத்துக்கு ஒத்தி வைத்தனர்.


மணிப்பூரில் இனக்கலவரம் ஏற்பட்டு கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் ஆன நிலையில், இன்னும் அங்கு வன்முறை முடிவுக்கு வரவில்லை. மே மாத தொடக்கத்தில் இருந்து மணிப்பூரில் மைதிஸ் மற்றும் குகி இடையேயான மோதலை தொடர்ந்து 140 க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்தனர்.


மேலும் படிக்க - மணிப்பூரில் பெண்கள் கொடுமைப்படுத்தப்பட்டதை வீடியோ எடுத்தவர் கைது


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ