மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று வானொலி மூலம், "மன் கி பாத்" என்ற நிகழ்ச்சி வாயிலாக பிரதமர் மோடி, நாட்டு மக்களுடன் உரையாற்றி வருகிறார். மேலும் இந்த உரை நிகழ்த்தும் 36-வது மன் கி பாத் நிகழ்ச்சியாகும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்த வகையில் ஆகஸ்ட் மாதத்தின் கடைசி ஞாயிற்றுகிழமையான இன்று பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு "மன் கி பாத்" நிகழ்ச்சியில் உரையாற்றினார். அதில்,


நாட்டை இணைக்க மன் கி பாத் நிகழ்ச்சி பெரிய வாய்ப்பாக உள்ளது. உணவை வீணாக்கக்கூடாது. தேவைக்க ஏற்ப தான் உணவு எடுத்த கொள்ள வேண்டும் என்பதில் தெளிவாக இருக்க வேண்டும். 


ஒவ்வொரு குடிமகனும், மற்றவர்களின் நலன், சமூக நலன் நாட்டின் வளர்ச்சிக்கு உதவ விரும்புகின்றனர். மன் கி பாத் மூலம் இதனை நான் தெரிந்து கொண்டேன். 


காதி மீதான மக்களின் ஆர்வம் அதிகரித்துள்ளது. இதனை நாம் முன்னெடுத்து செல்ல வேண்டும் என கோரிக்கை வைக்கிறேன். காந்தி ஜெயந்தியன்று காதி பொருட்களை வாங்கி ஏழைகளுக்கு உதவ வேண்டும். தீபாவளி அன்று ஏழைகள் தங்களது வீட்டில் விளக்கேற்ற அனைவரும் உதவ வேண்டும். 


காந்தி ஜெயந்தி முன்பு சுத்தத்திற்காக, கடந்த மன் கி பாத் நிகழ்ச்சியில் உறுதிமொழி ஏற்றோம். முதல் 4 நாளில் 75 லட்சம் மக்கள் தூய்மை இயக்கத்தில் இணைந்தனர். 40 ஆயிரம் பேர் சுத்தம் தொடர்பான பணிகளில் ஈடுபட்டனர். இது பெரிய மகிழ்ச்சியை அளித்துள்ளது. 


சுத்தம் தொடர்பான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்த்ததற்காகவும், ஆதரவுக்காகவும் மீடியாக்களுக்கு நன்றி தூய்மை இயக்கத்தில் மின்னணு மற்றும் பத்திரிகைகளின் பங்கு மிகவும் முக்கியமானது. இவை தான் நேர்மறையான மாற்றத்தை உருவாக்கின. 


இவ்வாறு அவர் பேசினார்.