`மன் கி பாத்`: மக்கள் அனைவரும் சட்டத்தில் வழியில் நடக்க வேண்டும்- மோடி
மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று வானொலி மூலம், "மன் கி பாத்" என்ற நிகழ்ச்சி வாயிலாக பிரதமர் மோடி, நாட்டு மக்களுடன் உரையாற்றி வருகிறார். மேலும் இந்த உரை நிகழ்த்தும் 35-வது மன் கி பாத் நிகழ்ச்சியாகும்.
அந்த வகையில் ஆகஸ்ட் மாதத்தின் கடைசி ஞாயிற்றுகிழமையான இன்று பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு "மன் கி பாத்" நிகழ்ச்சியில் உரையாற்றினார். அதில்,
அனைவருக்கும் ஓணம் பண்டிகை வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன். பண்டிகை காலத்தில் நடந்து வரும் வன்முறை வேதனை அளிக்கிறது. நம்பிக்கை என்ற பெயரில் நடத்தப்படும் வன்முறையை இந்த நாடு பொறுத்துக் கொள்ளாது.
மக்கள் அனைவரும் சட்டத்தில் வழியில் நடக்க வேண்டும். எந்த காரணத்திற்காகவும் சட்டத்தை கையில்
எடுப்பதையோ அல்லத சட்டத்தை மீறுவதையோ ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த வன்முறை சம்பவத்திற்கு காரணமாகவர்கள் யாராக இருந்தாலும், எங்கிருந்தாலும் அவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள்.
இந்தியா மகாத்மா காந்தியும், புத்தரும் அவதரித்த பூமி. இங்கு எந்த வடிவிலும் வன்முறை இருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.
வரும் பண்டிகைகளை சுத்தத்துடன் கொண்டாடுவோம். கேரளாவில் துவங்கி உள்ள ஓணம் பண்டிகை கொண்டாட்டம் அனைவரிடமும் உள்ள ஏற்ற தாழ்வுகளை களையட்டும்.
சுற்றுப்புற பாதுகாப்பு விழிப்புணர்வுடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு 'ஸ்வச்தா கி சேவா' என்ற திட்டத்தை துவக்க உள்ளோம். நாட்டின் சுத்தத்தில் தொடர்ந்து கவனம் செலுத்துவோம்.
இவ்வாறு அவர் பேசி உரையாற்றினார்.