கேரள மாநிலம் வயநாட்டில் நடைப்பெற்ற மோதலில் மாவோயிஸ்ட் ஒருவன் மாநில அதிரடிப்படை வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டான்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் வைத்திரி காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில், ஒரு தனியார் ரிசார்ட்டில் நேற்று இரவு மாவோயிஸ்டுகள் புகுந்ததாக அதிரடிப்படை வீரர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.


கிராமப்பகுதிக்குள் நுழைந்த மாவோயிஸ்டுகள், அங்கிருந்தவர்களை சிறைப்பிடித்து பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். இதுகுறித்து தகவல் அறித்து சம்பவயிடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மாவோயிஸ்டுகள் இருந்த ரிசார்ட்டை சுற்றி வளைத்து மாவோயிஸ்டுகளை நோக்கி துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். அதிரடிப்படை வீரர்களுக்கு எதிராக மாவோயிஸ்டுகளும் துப்பாக்கி சூடு நடத்தினர்.


சில மணி நேரம் நீடித்த இந்த சண்டையில் மாவோயிஸ்ட் தலைவர் சுட்டுக்கொல்லப்பட்டாதக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 


காயமடைந்த மற்றொரு மாவோயிஸ்ட் அங்கிருந்து காட்டிற்குள் தப்பிச் சென்றுவிட்டதாக தெரிகிறது. அவனை அதிரடிப்படையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்


உள்ளூர் ஊடக தகவல்களின் படி சுட்டக்கொல்லப்பட்ட நபர் CP ஜலீல் என தெரியவந்துள்ளது. 5 பேர் கொண்ட குழுவாக சம்பத்தப்பட்ட பகுதியில் மவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தியதாகவும், இந்த தாக்குதலில் 2 காவலர்கள் படுகாயம் அடைந்தனர் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.