கார் ஏற்றுமதியிலும் விற்பனையிலும் சாதனை படைத்துள்ள Maruti Suzuki!
மாருதி சுசுகி மிகப்பெரிய கார் ஏற்றுமதியாளராகி, சாதனை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் உள்நாட்டு விற்பனையில் முன்னணியில் உள்ள மாருதி சுஸுகி இந்தியா, இந்தியாவில் வாகனங்களின் முன்னணி ஏற்றுமதியாளராக மாறியுள்ளது.
மாருதி சுசுகி மிகப்பெரிய கார் ஏற்றுமதியாளராகி, சாதனை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் உள்நாட்டு விற்பனையில் முன்னணியில் உள்ள மாருதி சுஸுகி இந்தியா, இந்தியாவில் வாகனங்களின் முன்னணி ஏற்றுமதியாளராக மாறியுள்ளது. மாருதி சுசூகி இந்தியா, 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதத்துடம் முடிவடைந்த காலாண்டில், இந்தியாவில் 1.76 லட்சத்திற்கும் அதிகமான யூனிட்களை விற்பனை செய்து சிறந்த விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்தது. இதன் மூலம், இந்திய வாகன உற்பத்தியாளர் இந்தியாவின் முன்னணி உற்பத்தியாளர்களில் ஒருவராக உருவெடுத்துள்ளது. இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில், 1.31 லட்சத்திற்கும் அதிகமான யூனிட்களை ஏற்றுமதி செய்து, வாகன ஏற்றுமதியிலும் நிறுவனம் முன்னணியில் உள்ளது.
மொத்த பயணிகள் வாகன (PV) ஏற்றுமதி ஜூலை-செப்டம்பர் காலப்பகுதியில் 1,60,590 யூனிட்டுகளாக இருந்தது. இது ஒரு வருடத்திற்கு முன்பு இதே காலகட்டத்தில் 1,57,551 யூனிட்களாக இருந்தது. பயணிகள் கார் ஏற்றுமதி 5 சதவீதம் சரிந்து 97,300 யூனிட்டுகளாக இருந்தது. யூடிலிடி வாகன ஏற்றுமதி 16 சதவீதம் உயர்ந்து 63,016 யூனிட்டுகளாக உள்ளது என்று இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் (SIAM) தரவு காட்டுகிறது.
கடந்த நிதியாண்டின் இதே காலத்தில் 297 யூனிட்களாக இருந்த மாருதி வேன்களின் ஏற்றுமதி செப்டம்பர் காலாண்டில் 274 ஆக குறைந்துள்ளது. இந்த காலகட்டத்தில் மாருதி சுசுகி இந்தியா (MSI) முன்னணியில் உள்ளது. ஹூண்டாய் மோட்டார் இந்தியா மற்றும் கியா இந்தியா முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களில் உள்ளன.
நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பாளரான MSI, மதிப்பாய்வுக்கு உட்பட்ட காலப்பகுதியில் 1,31,070 பயணிகள் வாகனங்களை ஏற்றுமதி செய்துள்ளது, முந்தைய நிதியாண்டில் 1,03,622 யூனிட்களை ஏற்றுமதி செய்துள்ளது. MSI நிறுவனத்தின் சிறந்த PV ஏற்றுமதி சந்தைகளில் லத்தீன் அமெரிக்கா, ASEAN, ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் அண்டை பகுதிகள் அடங்கும். அதே நேரத்தில் அதன் முதல் ஐந்து ஏற்றுமதி கார்களின் மாடல்களில் Baleno, Dzire, Swift, S-Presso மற்றும் Brezza ஆகியவை அடங்கும்.
மேலும் படிக்க | காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டம் அதிமுகவுடையதா?... துரைமுருகன் அளிக்கும் விளக்கம்
ஜூலை-செப்டம்பர் காலத்தில் ஹூண்டாய் மோட்டார் இந்தியாவின் வெளிநாட்டு ஏற்றுமதி செய்த கார்களின் எண்ணிக்கை 74,072 யூனிட்களாக இருந்தது. இது முந்தைய ஆண்டில் 66,994 யூனிட்களில் இருந்த நிலையில், 11 சதவீதம் அதிகமாகும். இதேபோல், கியா இந்தியா கடந்த நிதியாண்டின் 23,213 யூனிட்கள் ஏற்றுமதி செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டு உலகளாவிய சந்தைகள் முழுவதும் 44,564 யூனிட்களை ஏற்றுமதி செய்துள்ளது.
நிசான் மோட்டார் இந்தியா இந்த ஆண்டில் 25,813 யூனிட்களை ஏற்றுமதி செய்தது. இது முந்தைய ஆண்டில் 18,614 யூனிட்களாக இருந்தது. ஜூலை - செப்டம்பர் காலாண்டில் ரெனால்ட் 18,614 யூனிட்களை ஏற்றுமதி செய்துள்ளது, அதே நேரத்தில் ஹோண்டா கார்ஸ் இந்தியா 13,326 யூனிட்களை ஏற்றுமதி செய்துள்ளது. ஃபோக்ஸ்வேகன் இந்தியா ஜூலை - செப்டம்பர் காலத்தில் 9,641 யூனிட்களை ஏற்றுமதி செய்துள்ளது.
செப்டம்பர் காலாண்டில், வர்த்தக வாகனங்கள் மற்றும் இரு சக்கர மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் உட்பட ஒட்டுமொத்த ஆட்டோமொபைல் ஏற்றுமதி, முந்தைய ஆண்டின் 14,10,711 யூனிட்களிலிருந்து 12,54,560 யூனிட்டுகளாக குறைந்துள்ளது. SIAM தலைவர் வினோத் அகர்வால் கூறுகையில், உள்ளூர் கரன்சிகளுடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டாலர் வலுவடைந்து வருவதால், ஆசியா மற்றும் லத்தீன் அமெரிக்காவில் உள்ள பல்வேறு நாடுகள் அன்னியச் செலாவணியைப் பாதுகாக்க இறக்குமதிக் கட்டுப்பாடுகளைக் கொண்டுவர வேண்டிய கட்டாயத்தில் உள்ளன என்றார்.
மேலும் படிக்க | பாஜகவுடன் சமரசமா?... ஸ்டாலின் அளித்த பளீச் பதில்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ