தங்கள் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், எதிர்க்கட்சித் தலைவர்களை குறைகூறுவதையே வாடிக்கையாக கொண்டுள்ளது பாஜக என பி.எஸ்.பி. தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உத்தர பிரதேசத்தின் அலிகடில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பிஜேபி தேசிய தலைவர் அமித் ஷா, மாயாவதி(பி.எஸ்.பி.) மற்றும் அக்லேஷ் யாதவ்(எஸ்.பி) கூட்டணி "ஒரு ஏமாற்றுவேலை" என்று கூறினர். 


இதற்கு பதிலடி கொடுத்து பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி கூறியாதவது, "உத்தரபிரதேசத்தில் பிஎஸ்பி-எஸ்.பி. கூட்டணியின் காரணமாக மோசமாக தோல்வியை சந்திக்க நேரிடும் என்பதை பாஜக முழுமையாக உணர்ந்துள்ளது. அதனால் தான் எங்கள் கூட்டணியை குறித்து குறைக்கூறிக் கொண்டு இருக்கிறார்கள். 


தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை திசை திருப்பும் நோக்கில் பாஜக மற்ற தலைவர்களை குறைகூறுவதையே வாடிக்கையாக  கொண்டுள்ளது. நாட்டின் வளர்ச்சி தான் எங்கள் நோக்கம் என்று வெற்று பேச்சு பேசும் பாஜகவினர், பி.எஸ்.பி. மற்றும் எஸ்.பி கூட்டணி குறித்து ஏன் பேசுகிறார்கள். அவர்களுக்கு எங்கள் கூட்டணி குறித்து பயம் வந்துவிட்டது என மாயாவதி தெரிவித்துள்ளார்.