இளம்பெண்னை தாக்கிய காவல்துறை அதிகாரிகளுக்கு வெகுமதி!
உத்திர பிரதேச மாநிலம் மீரட் நகரில் முஸ்லீம் இளைஞரை காதலித்த காரணத்தால் இந்து இளம்பெண் காவல்துறையால் கடுமையாக தாக்கப்பட்டார்.
உத்திர பிரதேச மாநிலம் மீரட் நகரில் முஸ்லீம் இளைஞரை காதலித்த காரணத்தால் இந்து இளம்பெண் காவல்துறையால் கடுமையாக தாக்கப்பட்டார்.
இச்சம்வம் நாடுமுழுவதும் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது. இதனையடுத்து இச்சம்வத்தில் ஈடுப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மூன்று பேர் இடைநீக்கம் செய்யப்பட்டனர். எனினும் அவர்கள் மீது வழக்கு ஏதும் பதியப்படவில்லை, மாறாக மூவருக்கும் உத்திரபிரதேச மாநில முதல்வர் வீட்டில் இடமாற்றம் என்னும் 'வெகுமதி' அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் 25-ஆம் நாள் உத்திர பிரதேச மாநிலம் மீரட் நகரில் முஸ்லீம் இளைஞரை காதலித்த காரணத்தால் இந்து இளம்பெண் காவல்துறையால் கடுமையாக தாக்கப்பட்டார். இந்த சம்வத்தினை Piyush Rai என்பவரது ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக தெரிவித்தார்.
கிடைக்கப்பெற்ற தகவல்களின் படி மீரட் நகரில் பிடிப்பட்ட இந்த இந்து-முஸ்லீம் ஜோடியினை விஷ்வ இந்த பரிசத் அமைப்பினர் சிறை பிடித்து வைத்துள்ளனர். இவர்களிடன் இருந்து உத்திர பிரதேச காவல்துறை அதிகாரிகள் இளம்பெண்ணை மீட்டு அவரது குடும்பத்தில் ஒப்படைக்க முற்பட்டுள்ளனர். இதற்கிடையில் காவல்துறையினர் பாதிக்கப்பட்ட இளம்பெண்னிடம் குண்டர்களைப் போல் நடந்துக்கொண்டுள்ளனர்.
சமூக ஊடகங்களில் வைரலாக சென்ற இந்த வீடியோ, உத்திரபிரதேச காவல்துறை வரை எட்டியது,. இதன் விளைவாக இந்த சம்பவத்தில் ஈடுப்பட்ட பெண் காவலர் உள்பட மூன்று காவல்துறை அதிகாரிகளை இடைநீக்கம் செய்து உத்திரபிரதேச காவல்துறை உத்தரவிட்டது.
இந்நிலையில் தற்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் மீது நடவடிக்கை எடுக்காமல், அவர்களுக்கு முதல்வர் பாதுகாப்பு படையில் இடம் அளிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் மேலும் சர்ச்சையினை எழுப்பியுள்ளது.