கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவ தொடங்கியதை அடுத்து, CBSE 10 ஆம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்வதாகவும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை ஒத்திவைப்பதாகவும் மத்திய கல்வி அமைச்சகம் சென்ற மாதம் அறிவித்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜூன் 1 ஆம் தேதி கொரோனா தொற்றின் நிலைமை மதிப்பாய்வு செய்யப்பட்டு பின்னர் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளின் தேதிகள் அறிவிக்கப்படும் என்று மத்திய கல்வி அமைச்சகம் கூறியது.


இந்நிலையில், 12-ம் வகுப்புத் தேர்வுகளை நடத்துவது தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில், இன்று மாலை  ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.


அண்மையில், கொரோனா இரண்டாவது அலை, தாக்கம் குறைந்து வந்தாலும், இன்னும் கட்டுக்குள் வராத நிலையில், 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு எவ்வாறு தேர்வுகளை நடத்துவது குறித்து மாநில அரசுகளுடன் மத்திய கல்வி அமைச்சகம் ஆலோசனைகளை நடத்தியது. இது தொடர்பாக மாநில அரசுகள் தங்கள் விரிவான ஆலோசனைகளையும் , கருத்துக்களையும், தெரிவிக்க வேண்டும் என மத்தியஅரசு கேட்டுக்கொண்டது.


இதில், தேர்வுகளை நடத்த வேண்டும் என்று பெரும்பாலான மாநிலங்கள் கருத்து தெரிவித்துள்ள நிலையில்,  சில மாநிலங்கள் மாற்று முறையில் மதிப்பீடு செய்யலாம் என யோசனை கூறியுள்ளன.


CBSC திட்டப்படி முதலாவதாக முக்கிய பாடங்களுக்கு மட்டும் தேர்வுகளை நடத்துவது,  இரண்டவதாக மாணவர்கள் பயிலும் பள்ளிக்கூடத்திலேயே,3 மணி நேரத்திற்கு பதிலாக 1.5 மணி நேரத்தில் முக்கியப் பாடங்களுக்கு மட்டும் தேர்வு நடத்துவது என இரு வகையான பரிசீலனைகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிகின்றன.


ALSO READ | CBSE பொதுத் தேர்வுகள் நடத்தப்படுமா; மாநிலங்கள் கூறுவது என்ன

இதனிடையே,  12-ம் வகுப்புத் தேர்வு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரைணயில், கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில், 12-ம் வகுப்புத் தேர்வுகளை நடத்துவதா அல்லது ரத்து செய்வதா என்பது குறித்து இன்னும் 2 நாட்களில் தகுந்த முடிவு எடுக்கப்படும் என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதி அளித்தது குறிப்பிடத்தக்கது. 


இந்நிலையில் மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் உடல் நிலை பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், 12-ம் வகுப்புத் தேர்வுகளை நடத்துவது தொடர்பாக, பிரதமர் மோடி தலைமையில், இன்று மாலை நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில், அவர் கலந்து கொள்ளவில்லை. கல்வியமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் ங்கேற்கின்றனர். இன்றைய ஆலோசனை கூட்டத்தில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளை நடத்துவது தொடர்பாக இறுதி முடிவெடுக்கப்படும் எனத் தெரிகிறது.


ALSO READ | CBSE: 10 ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து, 12 ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைப்பு: கல்வி அமைச்சகம்


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR