Loan moratorium: கடன் தவணை சலுகையில் வட்டிக்கு வட்டியிலிருந்து விலக்கு கிடைக்குமா..!!!
கடன் தவணை, வீடு வாகன, தனிநபர் கடன்களுக்கான தவணைகளை ( EMI) செலுத்த இயலாமல் பலர் அவதிப்பட்டனர். இதை கருத்தில் கொண்டு கடன் தவணை ஒத்தி வைப்பு சலுகையை ரிசர்வ் வங்கி அறிவித்தது.
கொரோனா (Corona) பரவலை தடுக்க, மத்திய அரசு பிறப்பித்த ஊரடங்கு காரணமாக தொழில் துறைகள் நிறுவங்கள் முடங்கின். இதனால், பல வித வருவாய் பாதிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, கடன் தவணை, வீடு வாகன, தனிநபர் கடன்களுக்கான தவணைகளை ( EMI) செலுத்த இயலாமல் பலர் அவதிப்பட்டனர். இதை கருத்தில் கொண்டு கடன் தவணை ஒத்தி வைப்பு சலுகையை ரிசர்வ் வங்கி (RBI) அறிவித்தது.
இதனால், இந்த வாய்ப்பை பயன்படுத்த விரும்புவோர், வங்கி நிறுவனங்களிடம் விண்ணபிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. இதைத் தொடர்ந்து, சிறு நிறுவனங்கள், தனி நபர்கள் உட்பட, பலர் இந்த சலுகையை பயன்படுத்திக் கொண்டனர்.
இந்த நிலையில், இந்த ஒத்தி வைப்பு சலுகை கடந்த ஆக்ஸ்ட் மாதத்துடன் முடிவடைந்தது. இயல்பு நிலை திரும்பாததால் இந்த சலுகை நீட்டிக்கப்படுமா என்ற எதிர்ப்பார்ப்பு நிலவியது.
கடன் வாங்கியவர்கள் நிலையை கருத்தில் கொண்டு வட்டிக்கு வட்டி விதிப்பதை தவிர்க்க வேண்டும் என்று முன்னாள் இந்திய கணக்கு தணிக்கை அதிகாரி ராஜீவ் மெஹரிஷி தலைமையிலான கமிட்டி பரிந்துரைத்துள்ளது.
செப்டெம்பர் 28ம் தேதி, உச்ச நீதி மன்றம் கடன் தவணை சலுகை தொடர்பான மனுவை விசாரணை செய்ய உள்ளது. கடன் தவணை சலுகையை செப்.28ம் தேதி வரை நீடித்த நீதிமன்றம், மத்திய அரசும் ரிசர்வ வங்கியும், கடன்களை திருப்பிச் செலுத்துவதில் நிவாரணம் வழங்க கடன் மறுசீரமைப்பு திட்டத்தை தயாரிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
மேலும் படிக்க | பென்ஷன் இல்லையே என டென்ஷன் வேண்டாம்...மாதம் ₹14,000 பென்ஷன் பெற வழி இருக்கு..!!!
நிலுவையில் உள்ள கடன் தொகையை மாற்றி அமைக்க பல வகையான வசதிகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடன் வாங்குபவர்களும் தங்களுக்கு ஏற்ற வகையை பயன்படுத்திக் கொள்ளலாம்.
கொரோனாவினால் பெரிதும் பாதிக்கப்பட்ட துறைகளை மேம்படுத்த பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும் உச்ச நீதிமன்ற பிரிவிடம் தெரிவித்தபோது, கொரோனா நெருக்கடி காரணமாக, கடன் தவணை ஒத்தி வைக்கப்பட்ட இடைப்பட்ட காலக்கட்டத்தில் கூடுதல் வட்டி வசூலிப்பது குறித்து தகவல்களை வழங்குமாறு நீதிமன்றம் கூறியது
முன்னதாக ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்தா தாஸ், கடன் தவணை சலுகை என்பது, தற்காலிக நிவாரணம் மட்டுமே என்றும், அதை மாற்றியமைக்கும் மறுசீரமைப்பு நடவடிக்கையானது தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட பல வர்த்தகங்கள் மீண்டெழ உதவும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க | ரேஷன் கார்டுடன் ஆதாரை இணைப்பதற்கான கடைசி நாள் செப்.30... இணைக்கும் வழிமுறை என்ன..!!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR