ரேஷன் கார்டுடன் ஆதாரை இணைப்பதற்கான கடைசி நாள் செப்.30... இணைக்கும் வழிமுறை என்ன..!!!

ரேஷன் கார்டுடன் ஆதார் கார்டை இணைக்கவில்லை என்றால், கார்டு வைத்திருப்பவர்கள் சிக்கலை சந்திக்க நேரிடும். ரேஷன் கார்டுடன் ஆதார் அட்டையை இணைப்பதற்கான கடைசி நாள் செப்டெம்பர் 30ம் தேதியாகும். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 18, 2020, 05:24 PM IST
  • ரேஷன் கார்டுடன் ஆதார் கார்டை இணைக்கவில்லை என்றால், கார்டு வைத்திருப்பவர்கள் சிக்கலை சந்திக்க நேரிடும்.
  • ரேஷன் கார்டுடன் ஆதார் அட்டையை இணைப்பதற்கான கடைசி நாள் செப்டெம்பர் 30ம் தேதியாகும்.
  • கொரோனா வைரஸ் தொற்று மற்றும் லாக்டவுன் பற்றி குறிப்பிடுகையில், ஏழை அல்லது தகுதியான நபர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக, ரேஷன் கார்டுகள் மற்றும் ஆதார் எண்கள் இணைக்கப்பட உள்ளன என அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
ரேஷன் கார்டுடன் ஆதாரை இணைப்பதற்கான கடைசி நாள் செப்.30... இணைக்கும் வழிமுறை என்ன..!!! title=

உங்கள் ரேஷன் கார்டுடன் (Ration card) ஆதார் கார்டை (aadhar Card)  இணைக்கவில்லை என்றால், இதை உடனடியாக இணைக்க நடவடிக்கை எடுக்கவும். இல்லை என்றால், கார்டு வைத்திருப்பவர்கள் சிக்கலை சந்திக்க நேரிடும். ரேஷன் கார்டுகள் மற்றும் ஆதார் அட்டையை இணைப்பதற்கான காலக்கெடு இப்போது செப்டம்பர் 2020 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ரேஷன் கார்டை ஆதார் அட்டையுடன் இணைப்பது எப்படி?
உங்கள் ரேஷன் கார்டை உங்கள் ஆதார் அட்டையுடன் நீங்கள் இதுவரை இணைக்கவில்லை என்றால், உங்களுக்கு உதவும் வகையில் ஆன் லைன் மூலம் ஆதார் எண்ணை ரேஷன் கார்டுடன் இணைக்கும் வழிமுறையை இங்கே விளக்கியுள்ளோம்.

மேலும் படிக்க | கூகிள் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்ட Paytm.. அதில் உள்ள பணம் என்ன ஆகும்..!!!

ஆதார் - யுஐடிஏஐ (Aadhaar – UIDAI)  வலைத்தளத்திற்குச் செல்லவும். ‘இப்போது தொடங்கு’ (Start Now) என்னும்ஆப்ஷனை கிளிக் செய்யவும்.

UIDAI வலை தளத்தில் உங்கள் முகவரி - மாவட்டம் மற்றும் மாநிலம் குறித்த விவரங்களை உள்ளிடவும்.

அதில் உள்ள ஆப்ஷன் பட்டியலிலிருந்து உங்கள் ‘ரேஷன் கார்டு’ எந்த வகையை சேர்ந்தது என்பதை தேர்ந்தெடுத்து அதில் கிளிக் செய்யவும்.

உங்கள் ரேஷன் கார்டு எண், ஆதார் எண், மின்னஞ்சல் முகவரி மற்றும்  ரேஷன் கார்டில் உள்ள மொபைல் எண்ணை உள்ளிடவும்.

உங்கள் மொபைல் எண்ணுக்கு ஓடிபி (OTP) அனுப்பபடும். அதை ஆன்லைனில் படிவத்தில் உள்ளிட வேண்டும்.
OTP ஐ உள்ளிடவும்.

அதன் பிறகு உங்களுக்கு ஒரு நோடிஃபிகேஷன் அதாவது தகவல் வரும். அதில் உங்கள் விண்ணப்ப செயல்முறை முடிந்ததைப் பற்றி தகவல் இருக்கும்.

இந்த செயல்முறை முடிந்ததும், உங்கள் விண்ணப்பம் சரிபார்க்கப்பட்டு, தகவல்கள் சரிபார்க்கப்பட்டபிறகு, உங்கள் ஆதார் அட்டை உங்கள் ரேஷன் கார்டுடன் இணைக்கப்படும்.

ஏழை மற்றும் புலம்பெயர்ந்த பயனாளிகள் பாதிக்கப்படக்கூடாது என்பதை உறுதிப்படுத்த ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களின் ரேஷன் அட்டைகளுக்கு மாநிலங்களுக்கு இடையேயான போர்டபிளிடி வசதியை செயல்படுத்தவும் அரசு நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது.

எனினும், ரேஷன் கார்டுடன் ஆதார் எண் இணைக்கப்படாவிட்டாலும், ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்படாது என்றும், தொடர்ந்து உணவு தானியங்கள் வழங்கப்படும் எனவும் மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் தனது அறிக்கையில்,  தெளிவுபடுத்தியுள்ளது. 

மேலும் படிக்க | தனியாரால் புறக்கணிக்கப்படும் வட சென்னைவாசிகள், ஆபத்பாந்தவனாகும் BSNL..!!!

கொரோனா வைரஸ் தொற்று மற்றும் லாக்டவுன் பற்றி குறிப்பிடுகையில், ஏழை அல்லது தகுதியான நபர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக, ரேஷன் கார்டுகள் மற்றும் ஆதார் எண்கள் இணைக்கப்பட உள்ளன என அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

‘ஒன் நேஷன் ஒன் ரேஷன் கார்டு’ திட்டத்தின் கீழ்,  ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களின் மாநிலங்களுக்கு இடையேயான போடபிளிடியை செயல்படுத்தும் பணிகளையும் அரசாங்கம் தொடங்கியுள்ளது. இந்த நடவடிக்கை ஏழை மற்றும் புலம்பெயர்ந்த பயனாளிகளின் நலனைப் பாதுகாக்கும். 

ரேஷன் கார்டுகளுடன் ஆதார் அட்டைகளை இணைப்பது முக்கியம்.  ரேஷன் கார்டு வைத்திருப்பவரின் தகவல்கள் மூலம் பயனாளிகளின் உரிமை பாதுக்காக்கப்பட்டு, தகுதியானவர்களுக்கு அரசு திட்டம் உதவிகள் கிடைக்கும். மோசடிகள் பெருமளிவில் தடுக்கப்படும். 

மேலும் படிக்க | பெற்றோர், மாணவர்களை ஆலோசிக்காமல் பள்ளிகள் திறக்கப்படாது: அமைச்சர் செங்கோட்டையன்

Trending News