இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவதை தவிர்க்கும் விதமாக இந்திய கடவுசீட்டை, வங்கிகடன் மோசடி விவகாரத்தில் சிக்கியுள்ள மெகுல் சோக்சி திருப்பியளித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆந்திரா வங்கி உள்ளிட்ட பொதுத்துறை வங்கிகளில் சுமார் ₹13,000 கோடி கடன்பெற்று திருப்பியளிக்காமல் மோசடி செய்ததாக பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி, அவருடைய நெருங்கிய உறவினரான மெகுல் சோக்‌ஷி ஆகியோர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இதனையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இருவரும் வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். 


இதற்கிடையில், கீதாஞ்சலி குழும உரிமையாளரான மெகுல் சோக்சி ஆண்டிகுவாவில் தஞ்சம் அடைந்தது தெரியவந்தது.  அவரை இந்தியா கொண்டு வரும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டு வந்தது. அந்த வகையில் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் மெகுல் சோக்‌ஷி மற்றும் அவரது குடும்பத்தாரை மீட்டுக்கொண்டு வர உதவுமாறு ஆண்டிகுவா வெளியுறவு அமைச்சர் சேட் கிரீனிடம், மத்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஸ்மா ஸ்வராஜ் கோரிக்கை விடுத்தார்.


இந்நிலையில் தற்போது இந்தியாவுக்கு தான் நாடு கடத்தப்படலாம் என்பதை உணர்ந்து அதனை தவிர்க்கும் விதமாக இந்திய கடவுசீட்டை(Passport) மெகுல் சோக்சி திருப்பியளித்துள்ளார்.


மெகுல் சோக்சி-யிடம் ஆண்டிகுவா மற்றும் இந்தியாவின் குடியுரிமைகள் இருந்தன. ஒருவர் இரு குடியுரிமையை வைத்திருக்க கூடாது என்று அவருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்ட நிலையில், சோக்சி தனது இந்திய குடியுரிமையை விடுவதற்கு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.