ஐதிராபாத்: மற்றொரு அதிர்ச்சியான சம்பவத்தில், தெலுங்கானாவை சேர்ந்த பெண் ஒருவரை அவரது கனவர், மருத்துவ நுழைவு தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்ற காரணத்தால் தீ வைத்து கொன்றுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ANI அறிக்கையின்படி, பாதிக்கப்பட்ட ஹரிகா என்ற பெண்னின் பெற்றோர், எல்.பி. நகர் காவல் நிலையத்தில் இந்த சம்பவம் குறித்து புகார் அளித்துள்ளனர். ஹரிகாவின் கனவர் ரிஷி குமார், வரதட்சணைக்காக தொடர்ந்து அவரை துன்புறுத்தி வந்ததாகவும், தற்போது மருத்துவ நுழைவு தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்ற காரணத்தால் தீ வைத்து கொன்றுள்ளார் எனவும் புகாரினில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தற்போது ஹரிகாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளதுடன், ஐபிசி பிரிவு 304 (பி) மற்றும் 302 கீழ் ரிஷி குமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.