ஹோலி பண்டிகையை முன்னிட்டு, வரும் மார்ச் 2 ஆம் நாள் டெல்லி மெட்ரோ சேவையானது பிற்பகல் 2.30 மணிவரை இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டெல்லி மெட்ரோ சேவையானது தினம்தோறும் காலை 5.20 மணிமுதல் இரவு 23:00 வரை இயங்கி வருகிறது. இந்நிலையில் வரும் மார்ச் 2 ஆம் நாள் ஹோலி பண்டிகை கொண்டாட படுவதை முன்னிட்டு அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாமல் இருக்க மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 


அந்த வகையில் டெல்லியில் பெரும்பான்மை மக்களின் போக்குவரத்து ஆதாரமான டெல்லி மெட்ரோ ரயில்களில் அசம்பாவிதங்களை தவிர்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.