பிரதமர் மோடியிடம் ஆட்டோகிராப் கேட்ட காயம் அடைந்த பெண்மணி -வீடியோ
விபத்தில் சிக்கி காயமடைந்த இளம் பெண்மணிக்கு ஆட்டோகிராப் போட்ட பிரதமர் நரேந்திர மோடி.
விபத்தில் சிக்கி காயமடைந்த இளம் பெண்மணிக்கு ஆட்டோகிராப் போட்ட பிரதமர் நரேந்திர மோடி.
வரும் 2019 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் மத்தியில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதில் பா.ஜ.க. தீவிரமாக இறங்கியுள்ளது. தேர்தலுக்கு இன்னுமும் ஆறு ஏழு மாதங்கள் இருக்கும் நிலையில், இப்பொழுதே பிரதமர் மோடி பிரட்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக, இன்று மேற்குவங்கம் மாநிலத்திற்கு சென்றார்.
அங்கு மிட்னாப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்பொழுது திடீரென அங்கு அமைக்கபட்டிருந்த கூடாரம் சரிந்து விழுந்தது. கூட்டம் அதிகமாக இருந்ததால், நெருச்சலில் சிக்கி பலர் காயம் அடைந்தனர். அவர்களை மிட்னாபூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொண்டு செல்லப்பட்டு, சிகிச்சை அழிக்கப்பட்டு வருகின்றன.
காயம் அடைந்தவர்களை நேரில் சென்று பார்த்த பிரதமர் மோடி, அனைவரையும் நலம் விசாரித்தார். அப்பொழுது காயம் அடைந்து சிகிச்சை பெற்று படுக்கையில் படுத்திருந்த இளம் பெண்மணி ஒருவர், பிரதமர் மோடி ஆட்டோகிராப் கேட்டுள்ளார். பிரதமர் மோடி எந்தவித மறுப்பும் தெரிவிக்காமல், அந்த பெண்மணிக்கு ஆட்டோகிராப் போட்டுத்தந்தார்.
இந்த விபத்தில் இதுவரை 70-க்கு மேற்ப்பட்டோர் காயம் அடைந்துள்ளதகாவும், அதில் 13 பெண்களும் அடங்குவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.