ராஜஸ்தான் மாநிலம், பிகானீர் மாவட்டத்தில் இன்று மதியம் இந்திய விமானப்படைக்கு சொந்தமான போர் விமானம்(MiG-21) விழுந்து நொறுங்கிது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ராஜஸ்தான் மாநிலம், பிகானீர் மாவட்டத்தில் உள்ள நல் விமானப்படை தளத்தில் இருந்து வழக்கம்போல் பயிற்சியில் ஈடுபடுவதற்காக இன்று மதியம் MIG 21 ரக போர் விமானம் புறப்பட்டுச் சென்றது. பயிற்சியின் ஈடுப்பட்ட விமானம் திடீரென கட்டுப்பாட்டை இழந்த விமானம் தரையில் விழுந்து நொறுங்கியது.  


இந்த விமானத்தில் சென்ற ஒரு விமானி அவசர கதவு வழியாக பாராசூட் உதவியுடன் கீழே குதித்து உயிர் தப்பினார்.



இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த விமான படை அதிகாரிகள் மற்றும் உள்ளூர் காவல்துறையினர், இவ்விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். 


கடந்த பிப்ரவரி 27-ஆம் நாள் பாகிஸ்தான் ஆயுதப் படைகளின் F-16 போர் விமானத்தை MiG-21 காற்றையர் போர் விமானம் சுட்டு வீழ்த்தியது. இச்சம்பவம் நிகழ்ந்த சில தினங்களில் தற்போது MiG-21 வெடித்து நொறுங்கியுள்ளது. இச்சம்பவத்தின் போது விங் கமாண்டர் அபிநந்தன் வர்த்தமான் பாகிஸ்தான் ராணுவத்தினரால் சிறைபிடிக்கப்பட்டு 60 மணி நேரத்திற்கு பின்னர் விடுதலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


MiG-21 ஆனது இந்திய விமான படையில் (IAF) பரவலாக பயன்படுத்தப்படும்  ஒற்றை-சீட்டர் போர் விமானம் ஆகும். ரஷ்யன் தயாரிப்பு போர் விமானமான MiG-21 ஒரு மல்டிலெக் பாதுகாப்பு விமானமாகும், இது ஒரு மணி நேரத்திற்கு 2,230 கி.மீ. வேகத்தில் (Mach 2.1) பயனிக்கும் திறன் படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.