குஜராத் :  குஜராத்தில் உள்ள முந்த்ரா துறைமுகத்தில் ரூ .9,000 கோடி மதிப்பிலான ஹெராயின் போதைப்பொருட்களை வருவாய் நுண்ணறிவு இயக்குநரகம் கைப்பற்றியுள்ளது.  ஆந்திராவின் விஜயவாடாவில் அமைந்துள்ள ஆஷி டிரேடிங் நிறுவனத்தால் இறக்குமதி செய்யப்பட்ட சரக்குகள் ஈரானில் உள்ள பந்தர் அப்பாஸ் துறைமுகத்திலிருந்து முந்த்ரா துறைமுகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


இரண்டு கண்டெய்னர் முழுவதும் இருந்த சரக்கில் ஆப்கானிஸ்தானில் இருந்து பதப்படுத்தப்பட்ட டால்கம் பவுடர் கட்டிகள் என கூறப்பட்ட நிலையில் பொருட்களில் போதைப்பொருட்கள் இருக்கலாம் என்று டிஆர்ஐ அதிகாரிகள் சந்தேகித்தனர்.  அதன்படி, இரண்டு கண்டெயினரை கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்த டிஆர்ஐ அதிகாரிகள், தடய அறிவியல் ஆய்வகத்தின் நிபுணர்கள் முன்னிலையில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, டால்கம் பவுடர் என்ற பெயரில் ஹெராயின் இருப்பதை உறுதி செய்தனர்.


அதன்படி, முதல் கன்டெய்னரில் இருந்து 1,999.58 கிலோ ஹெராயினும் இரண்டாவது கன்டெய்னரில் இருந்து 988.64 கிலோ ஹெராயினும் மீட்கப்பட்டது.  டால்கம் பவுடர் என்ற போர்வையில் மொத்தம் 2,988.22 கிலோ ஹெராயின் துறைமுகத்துக்கு வந்து இறங்கியுள்ள செய்தி டிஆர்ஐ அதிகாரிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  தொடர்ந்து, குஜராத்தில் டெல்லி, சென்னை, அகமதாபாத், காந்திதம் மற்றும் மாண்ட்வி ஆகிய இடங்களில் போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் இச்சம்பவம் தொடர்பாக இரு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.



மேலும், ஹெராயின் கடத்தல் குறித்து பல அதிகாரிகளும், நிறுவனங்களும் விசாரணையில் சிக்கியுள்ளனர் இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில், ஆப்கானிஸ்தான் நாட்டவர்களின் தொடர்பும் இருப்பதாக தெரியவந்துள்ளது.  கடந்த ஜூலை மாதம், நவி மும்பையில் உள்ள நவா ஷேவா துறைமுகத்தில் சில கன்டெய்னரில் இருந்து சுமார் 300 கிலோ ஹெராயின் கைப்பற்றப்பட்ட நிலையில் இது உலகின் மிகப்பெரிய ஹெராயின் கைப்பற்றப்பட்டதாக இருக்கலாம் என அதிகாரிகள் கூறுகின்றனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR