போபால்: மத்திய பிரதேச இளைஞர்களுக்கும், வேலையற்றோருக்கும் (Unemplyed) ஒரு நல்ல செய்தியை காங்கிரஸ் (Congress) தலைமையிலான கமல்நாத் (Kamal Nath) அரசு அறிவித்துள்ளது. சுமார் 1 லட்சம் பேருக்கு வேலை அளிக்கும் பணியை மத்திய பிரதேச அரசு (Government of Madhya Pradesh) மேற்கொண்டு வருகிறது. இதுக்குறித்து பேசிய மத்தியப் பிரதேச அரசின் கூட்டுறவு அமைச்சர் கோவிந்த் சிங், காவல் துறை, பள்ளி கல்வித் துறை, உயர் கல்வித் துறை, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை, சமூக நீதித்துறை உள்ளிட்ட 12 -க்கும் மேற்பட்ட துறைகளில் இந்த ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது என்று தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் பேசிய அமைச்சர் கோவிந்த் சிங், காலியாக உள்ள அனைத்து பதவிகளையும் நிரப்ப முதலமைச்சர் கமல்நாத் அறிவுறுத்தியுள்ளதாகவும், காலியாக உள்ள இந்த பதவிகளை 1 வருடத்திற்குள் நிரப்ப வேண்டும் என்றும் கூறினார். 


இந்த ஆட்சேர்ப்புகளில், ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்படும். முந்தைய பாஜக அரசு அவுட்சோர்சிங் நடைமுறையைத் தொடங்கியது. அதன்மூலம் அரசாங்கத்திடமிருந்து அதிக பணம் வாங்கி, ஊழியர்களுக்கு குறைந்த சம்பளம் வழங்கப்படுகிறது. தற்போது, இத முறை முடிவுக்கு கொண்டு வரப்பட்டு, நேரடி ஆட்சேர்ப்பு முறை செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் கோவிந்த் சிங் கூறினார். 


இது தவிர, மத்திய பிரதேசம் மாகி நூடுல்ஸின் (Maggi Noodles) சப்ளை செய்வதில் மிகப்பெரிய மாநிலமாக மாறும் என்று கோவிந்த் சிங் கூறினார். இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. 


மத்தியப் பிரதேச மாநிலத்தில் முதலீட்டை அதிகரிக்க கமல்நாத் அரசு பல முடிவுகளை எடுத்துள்ளது. அதை படிப்படியாக நடைமுறை படுத்தப்பட்டு வருகிறோம். உண்மையில், மத்தியப் பிரதேச அரசு இப்போது வருமானம் அதிகமாகவும், செலவு குறைவாகவும் இருக்கும் வகையில் மாநிலத்தில் நல்ல திட்டங்களை கொண்டு வருவதில் கவனம் செலுத்துகிறது.


15 ஆண்டுகளில், பாஜக அரசு கருவூலத்தை முற்றிலும் காலி செய்துள்ளது. இப்போது அரசாங்கம் தனது செலவுகளைக் குறைத்து விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் எனவும் அமைச்சர் கூறினார்.