எல்லை தாண்டி மீன் பிடிக்கும் மீனவர்களுக்கு அபராதமும், சிறை தண்டனையும் விதிக்கப்படும் என்று இலங்கை அரசு புதிய சட்டம் ஒன்றை நேற்று பிறப்பித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இலங்கை அரசால் தடை செய்யப்பட்ட இலங்கை கடல் பகுதியில் தமிழக மீனவர்கள் மீன் பிடிப்பதாக இலங்கை மீனவ பிரதிநிதிகள் குற்றம் சாட்டினர்.


இதுகுறித்து இன்று தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ள மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்;-இலங்கையின் புதிய சட்டம் சர்வதேச அளவில் மனித உரிமை மீறும் செயலாகும்.


இலங்கை இயற்றியுள்ள கடல் எல்லை சட்டம் தமிழக மீனவர்களை கடுமையாக பாதிக்கும் இதற்கான சட்டத்திருத்தத்தை தயாரிப்பதற்காக தனி குழுவும் அமைக்கப்பட்டது என்றார்.


தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தாக்கக் கூடாது என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். சுமூக பேச்சுவார்த்தைக்கு இலங்கை அரசு ஒத்துழைக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். 


மேலும் அவர், இலங்கை கடல் பகுதியில் தடை செய்யப்பட்ட வலைகள், படகு மூலம் மீன் பிடிக்கும் உள்நாட்டு மீனவர்களுக்கு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படுவது 
போல இலங்கை கடல்பகுதியில் மீன் பிடிக்கும் வெளிநாட்டு படகுகளுக்கும் தண்டனை மற்றும் அபராதம் விதிப்பதற்கு அந்நாட்டு மீன்வளத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.