பிரதமர் மோடிக்கு உயர்மட்ட பாதுகாப்பு: மந்திரிகள், அதிகாரிகளுக்கு நெருங்க அனுமதி கிடையாது!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சில நாட்களுக்கு முன்னர் மாவோயிஸ்டுகள் பிரதமர் நரேந்திர மோடியை கொல்ல சதித்திட்டம் தீட்டியுள்ளதாக தகவல் வெளியானது. சமீபத்தில் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், பிரதமர் மோடியின் பாதுகாப்பு தொடர்பான உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தை கூட்டி உள்துறை செயலாளர், தேசிய பாதுகாப்பு முகமை, புலனாய்வு முகமை தலைவர் ஆகியோருடன் பிரதமரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக விரிவான ஆலோசனை நடத்தினார். 


இதையடுத்து, 2019 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு பிரதமருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பான புதிய வழிகாட்டுதல்களை மத்திய உள்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ளது.


மந்திரிகள் மற்றும் அதிகாரிகள் யாரும் சிறப்பு பாதுகாப்பு படையின் அனுமதியின்றி பிரதமரை நெருங்க அனுமதிக்க கூடாது என பிரதமரின் புதிய பாதுகாப்பு வழிகாட்டுதலில் தெரிவித்துள்ளது. 


பாதுகாப்பு அச்சுருத்தல் தொடர்பாக சிறப்பு பாதுகாப்புப்படையின் அறிவுறுத்தலின் பேரில் 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கு மோடி சாலை பிரச்சாரங்களில் ஈடுபடமாட்டார் எனவும் அதற்கு பதிலாக பொதுக்கூட்டங்களில் மட்டுமே உரையாற்றுவார். இந்த புதிய விதிமுறைகள் பிரதமரின் பாதுகாப்பு குழுவிற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது!