ஜெய்பூர்: ராஜஸ்தான் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. புதிதாக நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் இன்று பதவிப்பிரமாணம் செய்துக்கொண்டனர்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அண்மையில் நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில், காங்கிரஸ் கட்சி வெற்றி வாகை சூடியது. நீண்ட இழுபறிக்கு பின்னர், மூன்று மாநிலங்களுக்கான முதல்வர்களை காங்கிரஸ் தேர்வு செய்து அறிவித்தது.


காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடந்த டிசம்பர் 13-ஆம் தேதி டெல்லியில் ராஜஸ்தான் மாநிலத்தின் முதல்வரா யாரை நியமிக்கலாம் என்று மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். கடும் ஆலோசனைக்கு பின்னர் ராஜஸ்தான் மாநிலத்தின் முதல்வராக அசோக் கெலாட், துணை முதல்வராக சச்சின் பைலட் அறிவிக்கப்பட்டனர்.



இந்நிலையில் இன்று புதிதாய பதியேற்ற முதல்வரின் அமைச்சரவை உறுப்பினர்கள் பதவியேற்றுக் கொண்டனர். 23 உறுப்பினர்கள் கொண்ட அமைச்சரவை உறுப்பினர்களுக்கு இன்று ராஜஸ்தான் ஆளுநர் கல்யாண்சிங் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். 


முத்லவர் அசோக் கெலோட்டின் முன்னிலையில் ராஜ் பவனில் 13 அமைச்சர்கள் மற்றும் 10 மாநில அமைச்சர்கள் பதவி ஏற்றனர்.


பதவியேற்ற 13 அமைச்சர்களில் புலாகி தாஸ் காலா, சாந்தி குமார் தாரிவால், பிரசாத்திலால் மீனா அகியோர் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.