நாட்டில் பார்சி சமூக மக்கள் தொகை தொடர்ந்து குறைந்து வருகிறது. இதற்குப் பின்னால் உள்ள ஒரு முக்கிய காரணம், இந்த சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு திருமணம் செய்து கொள்ளும் ஆர்வம் குறைவாக இருப்பது தான். மிக குறைந்த மக்கள்தொகை கொண்ட இந்த சிறுபான்மை சமூகத்தின் திருமணமாகும் தகுதி பெற்ற ஆண்களில் 30 சதவீதம் பேர் திருமணமாகாதவர்கள். இந்நிலையில், சிறுபான்மையினர் விவகார அமைச்சகத்தின் "ஜியோ பார்சி" திட்டத்தின் கீழ், பார்சி ஆண் மற்றும் பெண்களை திருமணம் செய்ய ஊக்குவிக்கும் வகையில் 'ஆன்லைன் டேட்டிங்' மற்றும் கவுன்சிலிங்கிற்கு சிறப்பு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சிறுபான்மையினர் விவகார அமைச்சகத்தின் திட்டத்தை நடத்தும்  பார்சோர் அறக்கட்டளையின் இயக்குனர் ஷெர்னாஸ் காமா இது குறித்து கூறுகையில், பார்சி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்து குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள ஊக்குவிப்பது அவசியம் என்று கூறினார்.  ஏனெனில் இந்த சமூகத்தில் மொத்த கருவுறுதல் விகிதம் ஒரு ஜோடிக்கு 0.8 ஆக உள்ளது மற்றும் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 200 முதல் 300 பிறப்புகள் ஏற்படுகின்றன. இது மற்ற சமூகங்களுடன் ஒப்பிடும் போது மிக மிக குறைவான அளவாகும். மேலும், ஆண்டிற்கு சுமார் 800 பேர் இறக்கின்றனர். 


மேலும் படிக்க |  நீண்ட கால குடியரசுத் தலைவர் முதல் போட்டியின்றித் தேர்வானவர் வரை - இந்தியக் குடியரசுத் தலைவர் குறித்த சுவாரஸ்யத் தகவல்கள் 


புதிய தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நலக் கணக்கெடுப்பின்படி, மொத்த கருவுறுதல் விகிதம் இந்து சமூகத்தில் 1.94 ஆகவும், இஸ்லாமிய சமூகத்தில் 2.36 ஆகவும், கிறிஸ்தவ சமூகத்தில் 1.88 ஆகவும், சீக்கிய சமூகத்தில் 1.61 ஆகவும் உள்ளது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, நாட்டில் பார்சி சமூகத்தின் மக்கள் தொகை 57,264 ஆக இருந்தது, இது 1941 இல் 1,14,000 ஆக இருந்தது.


சிறுபான்மையினர் விவகார அமைச்சகம் நவம்பர் 2013 இல் 'ஜியோ பார்சி' திட்டத்தை அறிமுகப்படுத்தியது, இது பார்சி சமூகத்தின் மக்கள்தொகையை சமப்படுத்தவும், மொத்த கருவுறுதல் விகிதத்தை அதிகரிக்கவும் ஒவ்வொரு ஆண்டும் ரூ. 4 முதல் 5 கோடி வரை பட்ஜெட் வழங்கப்படுகிறது.


அறக்கட்டளையின் உயர்மட்ட பொறுப்பாளர் ஷெர்னாஸ் காமா கூறுகையில், "ஜியோ பார்சி திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து, 376 குழந்தைகள் பிறந்துள்ளன (ஜூலை 15 வரை). ஒவ்வொரு ஆண்டும் பார்சி சமூகத்தில் சராசரியாக 200 குழந்தைகள் பிறக்கிறது " என்றார்.


பார்சி சமூகத்தில் குழந்தைகள் குறைவாகப் பிறப்பதற்கு முக்கிய காரணம் திருமண வயது வந்தும் திருமணம் ஆகாதவர்கள்  என்று அவர் கூறுகிறார். அவர் இது குறித்து  கூறுகையில், “பார்சி சமூகத்தைச் சேர்ந்த  திருமணத்திற்கு தகுதியானவர்களில் 30 சதவீத  திருமணமாகாதவர்கள் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது ” என்றார்.


திருமணமானவர்களில் 30 சதவீதம் பேருக்கு சராசரியாக ஒரு குழந்தை உள்ளது. பார்சி சமூகத்தில் திருமணம் செய்து கொள்ளும் பெண் குழந்தைகளின் சராசரி வயது 28 ஆகவும், ஆண் குழந்தைகளின் சராசரி வயது 31 ஆகவும் உள்ளது.


மேலும் படிக்க |  President of India: குடியரசுத் தலைவர் பெறும் சம்பளம் மற்றும் இதர வசதிகள் என்ன


ஷெர்னாஸ் காமா  மேலும் கூறுகையில், 'இளைஞர்களிடையே, குறிப்பாக பெண்களிடையே சுதந்திரமாக வாழ வேண்டும் என்ற  உணர்வுதான் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பதற்கு முக்கிய காரணம். பார்சி இளைஞர்களுக்கு முதியோர்களை பராமரிக்கும் பொறுப்பு உள்ளது. இதனால் அவர்களால் திருமணம் செய்ய முடியவில்லை. ஒவ்வொரு இளம் தம்பதியருக்கும் எட்டு முதியவர்களை பராமரிக்கும் பொறுப்பு உள்ளது. ஆனால், 10 லட்சம் ரூபாய்க்கு குறைவான வருமானம் உள்ளவர்களுக்கு, முதியோர்களை பராமரிக்க, அரசு, மாதம், 4,000 ரூபாய் உதவி செய்கிறது. ஆனாலும், அது போதாத நிலையில் தான் உள்ளது.


லேடி ஸ்ரீ ராம் கல்லூரியின் இணைப் பேராசிரியை ஷெர்னாஸ் மேலும் கூறுகையில், கோவிட் காலத்தில் பல திருமணங்கள் நடந்தது மட்டுமல்லாமல், ஏராளமான குழந்தைகளும் பிறந்தன. ஜியோ பார்சி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளால், 2020 ஆம் ஆண்டில் 61 குழந்தைகளும், 2021 ஆம் ஆண்டில் 60 குழந்தைகளும் பிறந்துள்ளதாக அவர் கூறினார்.


பார்சி இளைஞர்களை திருமணம் செய்து கொள்ள என்ன முயற்சிகள் எடுக்கப்படுகின்றன என்று கேட்டபோது, ​​"கோவிட் காலத்தில், நாங்கள் ஆன்லைன் டேட்டிங் தொடங்கினோம், அது நல்ல பலனைத் தந்துள்ளது. எங்கள் ஆலோசகர்கள் களத்தில் பணியாற்றத் தொடங்கியதால் இடையில் சிறிது இடைவெளி ஏற்பட்டது. இப்போது மீண்டும் இந்த ஆன்லைன் டேட்டிங் தொடங்க உள்ளது.


திருமண நோக்கத்திற்காக ஆன்லைன் டேட்டிங் ஏற்பாடு செய்யும் முறைகள் குறித்து ஷெர்னாஸ் கூறினார், “உள்ளூர் மட்டத்தில் சமூக நிகழ்வுகளில் திருமணமான ஆண் மற்றும் பெண்களின் விருப்பு வெறுப்புகள், வருங்கால வாழ்க்கைத் துணையின் எதிர்பார்ப்புகள் மற்றும் வேறு சில தனிப்பட்ட தகவல்கள் குறித்து எங்கள் ஆலோசகர்கள் விவாதிப்பார்கள்.  இதற்குப் பிறகு, இவர்கள் ஆன்லைன் வழியில் அறிமுகப்படுத்தப்படுகிறார்கள். இவர்கள் திருமணத்தை தங்கள் விருப்பப்படியே முடிவு செய்கிறார்கள். வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பதற்கான தளத்தை மட்டுமே நாங்கள் அவர்களுக்கு வழங்குகிறோம்.


ஜியோ பார்சி திட்டத்தின் கீழ், ஆன்லைன் டேட்டிங் மட்டுமின்றி, திருமணத்திற்கான ஆலோசனை சேவையும் வழங்கப்படுகிறது மற்றும் நேருக்கு நேர் சந்திப்புகள் அதாவது 'மேட்ரிமோனியல் மீட்' ஏற்பாடு செய்யப்படுகிறது. ஷெர்னாஸ் கூறினார். 


மேலும் படிக்க |  குழந்தைகள் காலை 7 மணிக்கு பள்ளிக்கு செல்லும் போது, நீதிபதிகளால் ஏன் முடியாது: நீதிபதி யுயு லலித்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ