பெங்களூருவில் மைரேஜ் 2000 போர் விமானம் விழுந்து விபத்து!!
பெங்களூருவில் விமானப்படை விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.
பெங்களூருவில் விமானப்படை விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஹெச்.ஏ.எல் விமான நிலையம் அமைந்துள்ளது. இங்கு ஹெச்.ஏ.எல் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கப்படும் விமானங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மைரேஜ் 2000 போர் விமானம் பரிசோதனைக்கு விடப்பட்டது. இதில் பயிற்சி விமானிகள் நேகி மற்றும் ஆப்ரோல் ஆகியோர் பயணித்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக அந்த விமானம் தரையில் விழுந்து நொறுங்கியது.
இந்த விபத்தில் ஒரு விமானி உயிரிழந்தார். மற்றொரு விமானி பாராசூட் மூலம் வெளியேற முயற்சித்துள்ளார். அவர் படுகாயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் தற்போது இந்த விபத்தானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த விபத்து சம்பவம் குறித்து, விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.